கூர்க்கின் அடர்ந்த காட்டுப்பகுதியில் நெருப்பிற்கு அருகில் விருந்து

Arushi Chaudhary

Last updated: Jan 5, 2018

தன்னுடைய மனதிற்கும், உடலுக்கும், ஆன்மாவுக்கும் புத்துணர்வளிக்க இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவரும் பயணிக்கும் இடம் பச்சைப் பசேலென்று பல நூறு ஏக்கர்கள் பரந்து விரிந்த மலைத்தோட்டங்கள், ஆர்ப்பரிக்கும் அருவிகள், விந்தையான வன உயிரினங்கள் மிகுந்த கூர்க் பகுதியாகும். இதற்கு முன்னர் பலமுறை நான் கூர்க் பகுதிக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், இந்தமுறை வார இறுதி நாட்களை வியத்தகு முறையில் அனுபவிக்க விரும்பினேன்.

காட்டுவெளியில் இதயத்தைக் கொள்ளைகொள்ளும் இரவு விருந்து

எங்களுடைய ஐந்தாவது திருமண ஆண்டுவிழா நெருங்குவதால், பெங்களூருவின் பரபரப்பான வாழ்க்கை முறையிலிருந்து பிரிந்து என்னுடைய கணவரோடு ஒரு அமைதியான இடத்திற்கு வந்து மகிழ்ச்சியாகக் கழிக்க விரும்பினேன். கூர்கில் நாங்கள் அனுபவித்த இந்த சிறு விடுமுறை அதை நிறைவாக்கியது. எங்களுடைய ஆண்டுவிழா அன்று, நாங்கள் ஒரு இயற்கை சார்ந்த வளமிக்க காட்டுப் பயணத்தை மேற்கொண்டோம். ஆர்ப்பரிக்கும் அருவிகள், மினுமினுக்கும் ஆறுகள், பூர்வீக மக்களின் குடியிருப்புகள், பச்சைக் கம்பளம் போர்த்தியது போன்ற புல்வெளிகளில் நாங்கள் மூழ்கித் திளைத்தோம்.

நீண்ட களைப்படையச் செய்யும் நடைபயணத்திற்குப் பின்னர் உள்ளூர் முகாமைக் கண்டதே ஆனந்தமளிப்பதாக இருந்தது. எங்களை வரவேற்கும் வகையில் கொளுந்து விட்டு எரிந்த போன்ஃபையர் (நெருப்பு) எங்களை வரவேற்றது. அந்த நீண்டதொரு நடைபயணத்திற்குப் பின்ன்ர் அந்த ஒரு இதமான சூழலைத்தான் நாங்கள் தேடினோம். இருந்தாலும், அன்றைய நாளின் தனிச்சிறப்பே சுவைமிக்க இரவு விருந்துதான். கூர்கின் தனிச்சிறப்பான நினைத்தாலே நாவில் தேனூறும் சில அருமையான உணவுகளும் இருந்தன. மற்ற அனைத்தையும் ஒதுக்கிவிட்டு நாங்கள் இணைந்து நெருப்பைச் சுற்றி அமர்ந்து எங்களுடைய விருந்தைச் சுவைத்து மகிழ்ந்தது நினைவிலிருந்து அகலாது. ஒட்டுமொத்த அனுபவமுமே அமைதியாகவும், தனித்ததாகவும், மிகவும் காதல் கலந்ததாகவும் இருந்தது. ஜோடியாக எங்கள் இருவருக்கும் மிகவும் நெருக்கமான தருணங்களின் பட்டியலில் இதுவும் ஒன்றாக அமைந்து விட்டது.

Read more: 8 Pristine Hotels in Coorg for an Unforgettable Stay

coorg

கூர்கினை சுற்றியுள்ள பார்க்க வேண்டிய இடங்கள்

எங்களுடைய மனதில் ஒரு சாதாரண விடுமுறையை கழிப்பதாகவே நினைத்துச் சென்றோம். ஆனால், இங்கு கிடைக்கும் கண்கவர் அழகு எங்களை வசீகரித்து எங்களுடைய சௌகரியமான சூழலிலிருந்து வெளிக்கொண்டு வந்துவிட்டது. அபே நீரருவி மற்றும் ராஜாஸ் சீட் போன்ற மலர் பூங்காக்களும் செயற்கை ஊற்றுகளும் நிறைந்த பிரசித்தி பெற்ற சூரியன் மறைவதைப் பார்க்கும் இடங்களுக்குச் சென்று எங்கள் நேரத்தைச் செலவிட்டோம். காபித் தோட்டங்களிடையேயும் அடர்த்திமிக்க காடுகளுக்குள்ளும் ஜீப் சஃபாரி பயணமும்கூடச் சென்றோம். அதைத் தொடர்ந்து, மலையிலிருந்து நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் ஒரு அருமையான, பிரபலமான இடமான மண்டல்பட்டி வியூபாய்ண்டிற்கும் நடந்து சென்றோம். என்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த இடம் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள டுபேர் யானைகள் முகாம். இங்கு நாங்கள் குளித்து மகிழ்ந்ததோடு யானைகளுக்கும் உணவளித்தோம்.

கூர்கில் எங்களுடைய மூன்றுநாள் விடுமுறை நாங்கள் எதிர்பார்த்ததைவிட விரைவில் கடந்து விட்டது. இப்போது நாங்கள் பெங்களூருவுக்குத் திரும்பிச் செல்லத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஆனால், கட்டாயமாகத் திரும்பி வருவோம். எங்களுடைய இந்த விடுமுறையை நினைவிலிருந்து நீங்கா இடம் பிடிக்கச் செய்த, அருமையான சுற்றுலா திட்டத்தை ஏற்பாடு செய்த Makemytrip-க்கு எங்களுடைய நன்றிகள்.

நான் புக் செய்தது Makemytrip பேக்கேஜ்: 
கூர்க் - டின்னர் இன் தி வைல்டர்னஸ் (கூர்க் - காட்டுவெளியில் விருந்து)

கட்டணம்: 
இந்திய ரூபாய் 21,999* முதல்​

Book Your Coorg Holiday Here!

*கட்டணம் மாறுபடலாம்.​