இந்தியாவின் மிக சொகுசான நகரங்களின் பட்டியலில் தலைமை இடத்தில் உள்ளது புதுடெல்லி. மிகவும் சொகுசான இடங்களுடன் தற்போது டெல்லி உங்களைக் கம்பீரமாக உணர வைக்கும். டெல்லியின் மாபெரும் மக்கள் தொகையிலிருந்தும் அந்த நகரத்தின் விறுவிறுப்பான வாழ்கையிலிருந்தும் உங்களுக்கு விடுதலை அளித்து அற்புதமான சுற்றுலா அனுபவத்தை இந்த இடங்கள் அளிக்கின்றன. அற்புதமான ஆசிர்வாதத்தை அளிக்கின்றன.
டெல்லியிலிருந்து வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்லத்தக்க இடங்களின் பட்டியல் இங்கு உள்ளது.
இந்தியாவில் உள்ள சொகுசான அழகிய தங்குமிடங்களில் நீம்ரானா கோட்டை அரண்மனையும் ஒன்று. இது வார இறுதி சுற்றுலாவிற்கு மிகவும் உகந்தது. மன அழுத்தத்தைக் குறைக்க இந்த இடம் உதவும், இராஜஸ்தானின் செல்வமிகு கலாச்சாரத்தின் அமைதியும் இந்த இடத்தை சுற்றியுள்ளது. இந்த மலை உச்சியின் கன்கவர் அழகைக் கண்டுகொண்டே நீம்ரானாவில் நீங்கள் வார இறுதி நாட்களைக் கழிக்கலாம். இந்த நகரின் சுவையான உணவும் வண்ணமிகு பாடல்களும் உள்ளுர் வாசிகளின் நடனங்களும் இந்த ஓய்விடத்தை அற்புதமான இடமாக மாற்றுகின்றன.
விலை: ஓர் இரவிற்கு ரூ.6000ல் அறைகள் துவங்குகின்றன.(அறையின் வகையைப் பொறுத்து மாறுபடும்).
அங்கே எவ்வாறு செல்வது: டெல்லியிலிருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ளது. நீம்ரான கோட்டை அரண்மனை சாலையின் மூலம் அடையலாம். தேசிய நெடுஞ்சாலை 8ன் வழியே 2 மணிநேரம் 40 நிமிடங்களில் டாக்சிப் பயணம் மூலம் இந்த இடத்தை அடையலாம்.
Book Your Stay at Neemrana Fort PalaceBook Your Stay at Neemrana Fort Palace
ஹில் போர்ட் எனப்படும் இந்த மலைக்கோட்டையானது பசுமையான கதிர்களால் சூழப்பட்டுள்ளது. குன்றுகளில் ஏற்படும் சூரிய உதயத்தினால் கண்கவர் காட்சிகள் ஏற்படுகின்றன. 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டை நளினமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அறைகள் நல்ல ஃபர்னிச்சர்களால் நிறைந்துள்ளன.
இங்குள்ள கூடங்கள் கிராமப்புறத்தைப் போன்று வெள்ளை மாடங்கள் கொண்டு விளங்குகின்றன. மத்திய கால சிற்றறைகள் அற்புதமான வடிவங்கள் ஆகியவை இந்த ஹோட்டலில் உள்ளன. இந்த கோட்டையில் உங்கள் அனுபவங்கள் எதுவும் சாதாரணமாக இருக்காது. இங்குள்ள கடுகு வயல்களைக் காண்பதாக இருந்தாலும் சரி, உலகப் புகழ்பெற்ற கேஸ்ரோலி சூரிய அஸ்தமனத்தை ஒட்டகச் சவாரியின் மூலம் காண்பதாக இருந்தாலும் சரி, இதற்கு ஈடு இணையே கிடையாது.
விலை: ஓர் இரவிற்கு ரூ.6000ல் அறைகள் துவங்குகின்றன. (அறையின் வகையைப் பொறுத்து மாறுபடும்).
அங்கே எவ்வாறு செல்வது: டெல்லியிலிருந்து 175 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இடத்தை ஆல்வார் பிவாடி சாலையில் பயணித்தால் 3 மணி நேரம் 45 நிமிடங்களில் அடையலாம். மூன்று மணி நேரத்தில் சென்றடையக்கூடிய வகையில் ரயில் பயணம் உண்டு. ஒருவருக்கான டிக்கெட் ரூ.840லிருந்து ரூ.1200 வரை வேறுபடும்.
Book Your Stay at Hill FortBook Your Stay at Hill Fort

வீட்டிலிருந்து சென்று ஓய்வெடுக்க உள்ள கதகதப்பான இடங்களுள் ஒன்று தி ட்ரீ ஹவுஸ் ஹைடுஅவே. இங்கு சமகாலமும் பாரம்பரியமும் இணைந்த வகையில் மர வீடுகள் உள்ளன. இதில் உங்கள் வார இறுதியைக் கழிக்கவும். இங்கு உங்களது காட்டு வாழ்க்கையை அனுபவிக்கவும். இந்த ஓய்விடத்தில் உள்ள பறவைகளையும் ஊர்வனவற்றையும் அனுபவிக்கலாம்.
ரொமான்டிக்கான விடுமுறை வேண்டும் என்று நினைப்பவர்கள், நட்சத்திரங்கள் சூழ்ந்த இரவில் அமர்ந்துகொண்டு மாச்சான் தண்ணீர் துளையின் அருகில் வந்து செல்லும் பல்வேறு மிருகங்களைக் கண்டு களிக்கலாம். ஓய்வான வார இறுதிக்கு, கலாச்சார நடவடிகைகளில் ஈடுபடலாம். சைக்கிளிங், சுற்றுப் பயணம் செல்வது, கிராமப்புற வருகைகள், உள்ளுர் கலைஞர்க-ளுடனான பனிமனைகள் ஆகியவற்றில் ஈடுபடலாம். காட்டு வாழ்கையை கண்டு ரசிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், நீங்கள் புலி சஃபாரிக்கு செல்லலாம். அடர்ந்த காட்டிற்குள் முன்புறம் எழும்பிய ஜீப்புகளில் சென்றால் புலிகளைக் காணலாம்.
முக்கியமான குறிப்பு: அங்கு வெறும் 5 மர வீடுகள் மட்டுமே உண்டு. எனவே முன்னரே முன்பதிவு செய்யவும்.
விலை: ஓர் இரவிற்கு ரூ.27,000ல் துவங்குகிறது. இதில் ஒரு சுற்றுக்கான உணவு, ஜீப் சஃபாரி ஆகியவை அடக்கம் (அறையின் வகைகளைப் பொறுத்து மாறுபடும்.)
அங்கு எவ்வாறு செல்வது. பாந்தவ்கர்க் தேசியப் பூங்காவானது டெல்லியிலிருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பல்வேறு விதமான பயணங்களின் மூலம் இதனை அடையலாம். டெல்லியிலிருந்து ஜபல்பூர் வரை நேரடியாக விமானச்சேவையைத் தொடங்கலாம் (நான்கரை மணி நேரம்). அதன் பின் ஹோட்டலுக்கு டாக்சி பிடித்து செல்லலாம். நீங்கள் இரயில் மூலமும் பயணம் செய்யலாம். அங்க அடிக்கடி செல்லவிருக்கும் இரயில்கள், கோன்ட்வானா எக்ஸ்பிரஸ் மற்றும் மகாகௌசல் எக்ஸ்பிரஸ்.
Book Your Stay at Tree House HideawayBook Your Stay at Tree House Hideaway
பசுமையான மலைகளில் அமைந்துள்ள ஷெர்வானி ஹில்டாப் அமைதியான 4 நட்சத்திர ஓய்விடம். இமயமலையின் தாவரங்களும் விலங்கினங்களும் இதனைச் சூழ்ந்துள்ளன. பசுமையான மலையின் கன்கவர் அழகை ரசிக்க இந்த ஓய்விடத்தின் அமைதி உங்களுக்கு உதவும். நைனிதாலின் முக்கிய இடமான மால் ரோடிற்கு நீங்கள் இதன் வழியே செல்லலாம். இந்த ஓய்விடத்திலிருந்து இது வெறும் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மால் ரோடில் உள்ள ஏரியிலிருந்து வரும் தென்றல் அதற்கான அழகைக் கொண்டுள்ளது.
விலை: ஓர் இரவிற்கு ரூ.19,000ல் துவங்குகிறது ( அறைகளின் வகையைப் பொறுத்து விலை மாறுபடும்.)
அங்கு எவ்வாறு செல்வது: டெல்லியிலிருந்து 285 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நைனிதாலை சென்றடைவதற்கான மிகச் சிறந்த வழி தேசிய நெடுஞ்சாலை 9ன் வழியாக 7 மணி நேரம் 45 நிமிடத்தில் அடையலாம். நீங்கள் ஓர் இரவு முழுவதும் செல்லும் இரயிலில் பயணிக்கலாம். கத்கோடம் வரை 7 மணி நேரத்தில் செல்லலாம். அதன் பின் நைனிதாலுக்கு டாக்சி எடுத்துச் சென்றால் 45 மணி நேரம் ஆகும்.
Book Your Stay at Shervani HilltopBook Your Stay at Shervani Hilltop
மறக்க முடியாத அனுபவம் வேண்டுமென்றால், அதற்கான இடம் ஓபராய் உதய்விலாஸ். செழுமையான கட்டிடக்கலையும் கலாச்சார விருந்துகளும் உள்ள இடத்தின் மகிழ்ச்சி மழையில் நனையுங்கள். இங்கு பல்வேறு காட்சி மண்டபங்களும் மாடங்களும் 50 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்துள்ளன. ரொமான்டிக்கான விடுமுறை வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்குள்ள வெளிமுற்றத்தில் நடை பயிலலாம். பிச்சோலா ஏரியின் உள் முற்றத்திலும் நடக்கலாம். உதய் விலாசில் 3 உணவகங்கள் உள்ளன. 2 வெளிப்புறக் குளம் உள்ளது. சொகுசான ஸ்பாக்கள் உள்ளன. நகர்ப்புற சந்தடிகளிலிருந்து அற்புதமான இடத்தை அளிக்கிறது.
விலை: ஒர் இரவிற்கு ரூ,29,000ல் அறைகள் துவங்குகின்றன. (அறைகளின் வகைகளைப் பொறுத்து இங்கு விலை வேறுபடுகிறது.)
அங்கு எவ்வாறு செல்வது: உதய்பூருக்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் மகாரானா ப்ரதாப் விமானநிலையம்.இது நகரிலிருந்து 20 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. நீங்கள் இரயில் மூலம் பயணம் செய்யவேண்டும் என்று விரும்பினால் அங்குள்ள பிரபலமான இரயில்கள் மேவார் எக்ஸ்பிரஸ், க்வாலியர் உதய்பூர் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை பயன்படுத்ததலாம். . இதில் பயண நேரம் பன்னிரண்டரை மணி நேரமாகும்.
Book Your Stay at Oberoi UdaivilasBook Your Stay at Oberoi Udaivilas
.jpg)
நவீன அழகியல் கொண்ட குகை வடிவில் இயற்கையின் அனுபவங்களையும் காட்டு வாழ்க்கையின் அனுபவங்களையும் உள்ளடக்கிய குகைகள் ப்ரைஸ் குகைகள். காட்டு வாழ்க்கையும் சுக வாழ்க்கையும் ஒருங்கிணைந்த இந்த இடமானது நகரத்தின் இரைச்சலான வாழ்க்கையிலிருந்து வெளியேற சிறந்த இடம். ஓய்வெடுத்துக் கொள்வதற்குத் தேவை. ப்ரைஸ் குகைகளானது உணவகங்கள் கொண்டது. இங்கு உலகளாவிய உணவு வகைகளுடன் அற்புதமான உணவு அனுபவமும் உள்ளது. காட்டு மரங்களின் எழிலும் பறவைகள் சிலுசிலுக்கும் தெய்வீகக் குரலும் இங்கு உள்ளது.
சாகசம் செய்ய விரும்புபவர்கள் பிஜ்ரானி பிராந்தியத்திற்குச் செல்ல வேண்டும். கார்பெட் தேசியப் பூங்காவில் உயர்தரமான காட்டுவாசி மக்கள்தொகை கொண்ட பிராந்தியங்களுள் ஒன்று பிஜ்ரானி பிராந்தியம்.
முக்கியக் குறிப்பு: ஷிவாலிக் குகை, அரசு குகை, மகாராணி குகை, கிராண்ட் மர வீடு ஆகியவை இங்குள்ள பிரபலமான குகைகள். நீங்கள் இங்கு புக் செய்யவேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
விலை: ஓர் இரவிற்கு ரூ.18,000ல் துவங்குகிறது (அறையின் வகைகளுக்கு ஏற்றபடி இது மாறுபடுகிறது)
அங்கு எவ்வாறு செல்து: நீங்கள் இரயில் மூலம் செல்லவேண்டுமென்றால் இதற்கு மிக அருகில் உள்ள இரயில் நிலையம் ராம்நகர ரயில் நிலையம். இது பார்க்கிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தப் பயணத்திற்கு 6 மணி நேரமும் 40 நிமிடங்களும் ஆகும்.
தி ராயல் ஆர்ச்சிட்ஸ் ரிசார்ட்டானது குளிர்காலத்திற்கான சொகுசான வார இறுதி பயணத்திற்கு ஏற்றது. மலைகளின் அழகிய காட்சிகளைக் கண்டு களிக்கும்போதே குளிரான மாலை வேளைகளையும் அனுபவியுங்கள். ஏதாவது சூடான பானம் அருந்துங்கள். பழைய கோட்டையின் பாணியில் இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது- குடும்பத்தினருடன் உங்களது ஓய்வைக் கழிப்பதற்கான இடம் இது. இங்கு பொன்னிறமான முகடுகள், ஆறு ஏக்கர் பரப்பளவுள்ள தாரா ஹால் எஸ்டேட்டும் பசுமையான தோட்டங்களும் உள்ளன. இந்தப் பள்ளத்தாக்கிற்கு மிக அருகில் இருக்கும் நீர் வீழ்ச்சியான கெம்ப்டி நீர்வீழ்ச்சியைக் கண்டுகளியுங்கள்.
விலை: ஓர் இரவிற்கு அறைகள் ரூ.8000 லிருந்து துவங்குகிறது (அறைகளின் வகைகளைப் பொறுத்து விலை வேறுபடும்.)
அங்கு எவ்வாறு செல்வது: நீங்கள் சாலையின் வழியாகப் பயணித்தால் 6 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும். தேசிய நெடுஞ்சாலை 1ன் வழியாக செல்ல வேண்டும். இந்த வழியில் பல்வேறு ரயில் பயணங்களும் உண்டு. இருப்பினும் சதாப்தி எக்ஸ்பிரசில் வருவது நல்லது என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
Book Your Stay at Royal Orchid Fort ResortBook Your Stay at Royal Orchid Fort Resort
அமர் விலாசிலிருந்து தாஜ் மஹாலைக் கண்டுகளிக்கலாம். நகர இரைச்சல்களில் இருந்து தப்பிக்க அற்புதமான இடம். இங்கு இராஜகம்பீரத்தின் அணைப்பில் இருப்பது போல் உணர்வீர்கள். நல்ல புத்தகத்தில் நுழைவது போல் உள்ள இடம் அமர் விலாஸ். இயற்கையான மரங்களின் இடையே சூரிய உதயத்தைக் கண்டுகளிக்கலாம். தனியான வாகனத்தில் விருந்தினர்கள் தாஜ் மஹாலைக் கண்டுகளிக்கலாம். இரவில் நிழல் உருவத்தில் அருமையான மெழுகுவர்த்தி உணவு கிடைக்கும். இது மிகவும் அற்புதமான கோடைகாலத்தை வழங்குகிறது. இலையுதிர் காலத்தில் வயல்கள் எல்லாம் செம்பழுப்பு நிற இலைகளால் மூடப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் இது ஒரு எளிய சொர்க்கம்.
விலை: ஓர் இரவிற்கு ரூ.25,000ல் அறைகள் துவங்குகின்றன. (அறையின் வகையைப் பொறுத்து வேறுபடுகிறது)
அங்கு எவ்வாறு செல்வது: அங்கு செல்வதற்கு எளிய வழி இரயில் பயணம்தான். 12050 வேக இரயில் பயணம் கோதிமான் எக்ஸ்பிரஸ். இங்குள்ள சராசரி நேரம் 50 நிமிடங்கள். தாஜ் எக்ஸ்பிரஸ் வழியில் 3 மணி 45 நிமிடங்களில் சாலையில் செல்லலாம்.
Book Your Stay at AmarvilasBook Your Stay at Amarvilas

அமைதியான பைன் மரக்காடுகளின் பின்னணியில் அமைந்துள்ளது. இந்த பசுமையான மலைகளின் அமைதியான காட்சியை இந்த டெரேசஸ் வழங்குகின்றன. டெரேசஸ்சில் உள்ள ஓய்விடங்கள் ஆகியவை 8 டீலக்ஸ் அறைகளையும், 12 சூப்பர் டீலக்ஸ் அறைகளையும் போட்டிக் ஸ்பாவையும் சொகுசான சிற்றறையையும் வழங்குகிறது. மலை உச்சியில் வெவ்வேறு உயரத்தில் ஒவ்வொரு சிற்றறையும் அமைந்துள்ளது. இதன் தனித்துவமான இடம் ஒவ்வொருவரையும் அதிசயிக்க வைக்கிறது. நவீன வசதிகளும் நவநாகரிகமான அலங்காரமும் பின்னிப்பிணைந்துள்ளன. ஈடு இணையில்லாத வசதியை டெரேசஸ் அளிக்கிறது.
விலை: ஓர் இரவிற்கு ரூ.14,000லிருந்து துவங்குகிறது.
அங்கு எவ்வாறு செல்வது: இரயில் மூலமோ சாலை மூலமோ பயணம் செய்தால் அங்கு செல்லலாம். கனாடாலுடன் இணைந்த அருகிலுள்ள இரயில் நிலையங்கள் டேராடூனும் ரிஷிகேசும். அதன் பின் டாக்சியில் சென்று இந்த இடத்தை அடையலாம். தேசிய நெடுஞ்சாலை 58ன் வழியாக சாலையில் பயணித்தால் 8 மணி நேரம் 15 நிமிடங்களில் இந்த இடத்தை அடையலாம்.
Book Your Stay at The TerracesBook Your Stay at The Terraces
இல்பர்ட் மேனார் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான ஹோட்டல். இது ஆங்கிலேயர்களால் 1840ல் கட்டப்பட்டது. ஓக் மரங்களுக்கும் பசுமையான காடுகளுக்கும் இடையில் இந்த ஹோட்டல் உள்ளது. இந்தத் தனித்துவமான அறைகளின் பெயர்கள் மசூரியைக் கட்டமைத்தவர்களின் பெயர்களைப் பெற்றுள்ளது. இமய மலையின் கண்கவர் காட்சிகள் புகைப்படக்காரர்களுக்கு அற்புதமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றன. நல்ல அழகான புகைப்படங்கள் எடுக்கலாம்.
விலை: ஓர் இரவிற்கு ரூ.12,000ல் அறைகள் துவங்குகின்றன. (அறையின் வகையைப் பொறுத்து விலை மாறுபடும்.)
அங்கு எவ்வாறு செல்வது: தேசிய நெடுஞ்சாலை 1ன் படி 6 மணி 50 நிமிடங்களில் சாலை வழியாகக் கடக்கலாம். இந்த வழியில் உள்ள பல்வேறு இரயில்கள் மூலம் பயணம் செய்யலாம். இருப்பினும் ஷதாப்தி எக்ஸ்பிரஸ் மூலம் செல்வதை நாங்கள் பரிந்துரைக்
Book Your Stay at Lemon Tree Tarudhan ValleyBook Your Stay at Lemon Tree Tarudhan Valley
Travel Light, Shoot Smart: Roshani Shah’s Guide to Travel Photography
Pallak Bhatnagar | Oct 15, 2025
Through the Lens: Capturing Global Wonders with Sony Cameras
Pallak Bhatnagar | Oct 6, 2025
Turn Your Holiday into a Love Story in Ras Al Khaimah!
Swechchha Roy | Sep 26, 2025
Colours of Mexico: From Capital Streets to Caribbean Shores
Pallak Bhatnagar | Aug 26, 2025
5 Off-the-grid Places You Need to Visit with the Oppo Reno14
Tanya Sharma | Jul 2, 2025
Why Oppo Reno14 is the Perfect Travel Companion
Tanya Sharma | Jul 2, 2025
Experience the Wild Heart of Northern Australia: Darwin, Litchfield, and Katherine!
Swechchha Roy | Jun 10, 2025
Chase Thrilling Adventure Activities on Yas Island in Abu Dhabi
Surangama Banerjee | Feb 27, 2025
5 Reasons Why You Should Book a Cruise Holiday Now!
Shubhra Kochar | Mar 25, 2021
A Holiday for Every Mood: 5 Magical Moments You Can Experience Only on Cordelia Cruises!
Supriya Taneja | Mar 31, 2021
7 Unique Destinations for Memorable Two-day Trips from Delhi
MakeMyTrip Holidays | Apr 26, 2024
Why I Did Myself a Favour by Escaping to Landour
Upasana Malik | Apr 27, 2020
Script Your next Weekend Story at Mandawa – The Open Air Art Gallery!
Surangama Banerjee | Apr 11, 2022
Things to Do in Corbett on Your Next Long Weekend
MakeMyTrip Holidays | Mar 9, 2020
Break the Monotony with these Fab Weekend Getaways from Mumbai!
Devika Khosla | Jan 4, 2021
Top Picks for a Luxury Weekend Break from Delhi
Devika Khosla | Sep 27, 2019