சிங்கப்பூரிலேயே காண வேண்டிய இடங்கள் நிறைய இருந்தாலும், உலகின் இந்தப் பகுதிக்கு வரும்போது, இந்த பூங்காக்களின் நகரைச் சுற்றிப் பார்ப்பதில் பல்வேறு ஆனந்தங்கள் உள்ளன. சூரிய ஒளியில் நாம் சுற்றிக் களிக்க இங்குள்ள எங்களது விருப்பமான இடங்கள் குறித்து இங்கே குறிப்பிட்டுள்ளோம்.
இந்தோனேசியாவின் எட்டாவது பெரிய தீவு பத்தாம் தீவு. இது மூன்று ‘ஜி’க்களுக்காக பிரபலமானது. கோல்ஃபிங், கேம்பிளிங் மற்றும் கார்ஜிங், அதாவது கோல்ஃப் விளையாடுவது, சூதாடுவது, மற்றும் ஊர் சுற்றுவது ஆகியவை. சிங்கப்பூரிலிருந்து ஒரு மணிநேரத்தில் படகில் சென்றால் பத்தாம் தீவிற்குச் செல்லலாம். நீங்கள் சூதாட்டக் கூடத்தில் சில நேரம் கழிக்க வேண்டுமா அல்லது சுவையான கடல் உணவு உண்ண வேண்டுமா அங்கு செல்லுங்கள்.
அருகில் உள்ள நீர் நிலைகளிலிருந்து பிடிக்கப்படும் கடல் நத்தைகள், நண்டுகள் ஆகியவற்றில் சமைத்த உணவை உண்ணலாம். இவற்றையெல்லாம் சுவைத்த பின்பும், உங்களுக்கு சக்தி இருந்தால் வாட்டர்ஃப்ரன்ட் நகருக்குச் செல்லலாம். அங்கு நீர் விளையாட்டுக்கள் மற்றும் கார்ட் ரேசிங் ஆகியவற்றில் பங்கு கொள்ளலாம். பத்தாம் மையத்தில் உள்ள மெஸ்ஜித் ரயா கிராண்ட் மசூதியும் புத்த கோவிலான மகா விகாரா தத்தா மைத்திரேயாவும் கவர்ச்சிகரமான இடங்கள்.
சிங்கப்பூரிலிருந்து உள்ள தொலைவு: 156 கிலோ மீட்டர்
மலாக்கா என்றும் அறியப்படும் இந்த இடம் தென்கிழக்கு ஆசியாவின் முக்கியமான வர்த்தகத் துறைமுகமாக ஒரு காலத்தில் இருந்தது. சிங்கப்பூரிலிருந்து பேருந்து மூலம் சென்றால் மூன்றரை மணி நேரத்தில் இதனை அடையலாம். இங்கு 8 ஹீரண் தெருவில் உள்ள 18ஆம் நூற்றாண்டு டச்சு வீடுகளையும் அதன் காலனியாதிக்க கட்டிடக்கலையையும் அனுபவிப்பது உறுதி. தி பாபா மற்றும் நயோன்யா பாரம்பரிய அருங்காட்சியகம், இங்கு காணவேண்டிய மற்றொரு பகுதி. இதனைத் தொடர்ந்து அங்குள்ள உணவகத்தில் ஒரு பிரபல உணவை ருசிக்கலாம். பிங் பாங் பந்துகளைப் போல் உள்ள கோழி அரிசி பந்து உணவு இங்கு மிகவும் பிரபலம்.
சிங்கப்பூரிலிருந்து உள்ள தொலைவு: 239 கிலோ மீட்டர்
சிங்கப்பூரிலிருந்து 10 நிமிட பயணத்தில் செல்லக்கூடிய சில கிராமங்களுள் ஒன்று உபின் தீவு. இது ஒரு கம்போங். 1960 களில் சிங்கப்பூரில் இருந்த வாழ்கையை இந்த வாழ்க்கை நினைவூட்டுகிறது. இங்கு மின்சாரமும் தண்ணீர் வசதியும் கிடையாது. இங்குள்ள கிராமத்தினர்கள் இன்னும் கிணற்றிலிருந்துதான் தண்ணீர் இறைக்கின்றனர். ஜெனரேட்டர்கள் மூலம்தான் மின்சாரம் பெறுகின்றனர். மளிகைக் கடைக்குச் சென்று மளிகைப் பொருட்கள் வாங்குவதற்குப் பதிலாக, அவர்கள் தங்களது உணவை தோட்டத்திலிருந்து விவசாயம் செய்தும் மீன்பிடி தொழில் மூலமும் பெறுகின்றனர். இந்த கிராமத்தை ரசிப்பதற்கான மிகச் சிறந்த வழி இதனைச் சுற்றித் திரிவதுதான். செக் ஜாவாவைச் சுற்றிப் பாருங்கள். இது கடல் வாழ்கை கொண்ட ஒரு சதுப்பு நில சக்காப்ளாக். இந்தத் தீவின் கரடு முரடான அடிச்சுவடுகளில் மோட்டார் பைக் மூலம் செல்லுங்கள்.
சிங்கப்பூரிலிருந்து செல்லும் தூரம் 68 கிலோ மீட்டர்.
வரலாற்று ரீதியாக, இந்தத் தீவு மிகவும் பாதுகாப்பான துறைமுகம். கடும் புயலின்போது பாதுகாப்பு அளிக்கும் வர்த்தகத் துறைமுகமாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் இது அமைந்துள்ளது. 1201ஆம் ஆண்டு மார்கோ போலோ இந்தத் தீவிற்கு வருகை புரிந்துள்ளார். தென் சீனக்கடலில் சாகசம் செய்ய ஒரு படகின் மூலம் நீங்கள் பின்டன் தீவை அடையலாம். இங்குள்ள பண்டைய கடற்கரைகளில் உலாவலாம். இந்த அமைதியான ஸ்தலத்தில் பல்வேறு விதமான சொகுசு தங்குமிடங்கள் உள்ளன. அழகிய சூழ்நிலையில் ஓய்வாக ஆசுவாசப்படுத்திக்கொள்ள விரும்புவர்களுக்கு இங்குள்ள பின்தான் தீவும் மிகச் சிறந்தது. பின்தான் தீவை அடைவதற்குச் சிறந்த வழி படகு சவாரிதான். அல்லது கட்டுமரப்பயணமும் செய்யலாம்.
சிங்கப்பூரிலிருந்து உள்ள தொலைவு: 2,198 கிலோ மீட்டர்.
மலேசியாவின் இரண்டாவது பெரிய நகரம் ஜொகூர் பாரு. நீங்கள் கடைத் தெருவிற்குச் செல்ல வேண்டுமா, அப்படியென்றால் நீங்கள் கண்டிப்பாக ஜொகூர் பாருவிற்குச் செல்ல வேண்டும். இங்குள்ள நகர சதுக்கத்தில் எல்லாவிதமான நுகர்வோர் பொருட்களும், அலங்காரப் பொருட்களும் துணிமணிகளும் உள்ளன. சிங்கப்பூரை விட இங்கு பொருட்களின் விலை குறைவு. சிங்கப்பூரிலிருந்து பேருந்து மூலம் சென்றால் ஒரு மணிநேரத்தில் அடையலாம். இங்கு மிகவும் பிரபலமான சீன கோவில்களும், இந்து கோவில்களும், மசூதிகளும் உள்ளன. இந்துக்களுக்கான அருள்மிகு ராஜகாளியம்மன் கண்ணாடி கோவில் கண்டிப்பாகக் காண வேண்டியவை. உங்களிடம் குழந்தைகள் இருந்தால் நீங்கள் அவசியம் செல்ல வேண்டிய இடம் லீகோலேண்ட் மலேசியா.
சிங்கப்பூரிலிருந்து உள்ள தொலைவு: 25 கிலோ மீட்டர்.
உங்களது பயணத்தில் நிறைய விளையாட்டும் கேளிக்கையும் தேவை என்றால் சிங்கப்பூரிலிருந்து ஒரு கேபிள் கார் பயணத்திற்கு செந்தோசா செல்லத் திட்டமிடவும். அங்கு சென்ற பிறகு 600 அடி உயரம் கொண்ட வான் பயணத்திற்குச் சென்றால் அங்கு சிலோசா கோட்டை உள்ளது. அங்குள்ள கடற்கரைகளில் உலவினால் திமிங்கலக் கண்காட்சிகளைக் காணலாம். பட்டாம்பூச்சி அருங்காட்சியகத்திற்கு செல்லலாம். நிறைய கேளிக்கைகளை அனுபவிக்க வேண்டுமென்றால் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவிற்குச் செல்லவும். இங்குள்ள தீம் பார்க்கில் உள்ள உலகளாவிய ஸ்டூடியோ, கடைத் தெருக்கள், சூதாட்டக்கூடம் மற்றும் எஸ்.இ.ஏ. கடல்வாழினம் ஆகியவை காண வேண்டியவை.
சிங்கப்பூரிலிருந்து உள்ள தொலைவு: 25 கிலோ மீட்டர்
நீங்கள் இயற்கை ஆர்வலரா, காட்டுப்பகுதியில் நேரம் செலவழிப்பதைத் தவிர வேறு எதையும் விரும்பாதவரா, உங்களுக்கான இடம் சுங்கோபுலோ வெட்லேண்ட் ரிசர்வ்தான். நீங்கள் இந்த இடத்தின் வழியாக நடந்துசெல்லும்போது, குறிப்பாக செப்டம்பருக்கும் மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்து செல்லும்போது, கண்டிப்பாக பாம்புகளையும், பல்லிகளையும் காணலாம். சைபீரியா மற்றும் சீனாவிலிருந்து வரும் புலம்பெயர் பறவைகளையும் நாரைகளையும் காணலாம். நீங்கள் கிராஞ்சி மாவட்டத்தில் இருக்கும்போது அங்குள்ள ஜூரோங் தவளை பண்ணைக்குச் செல்லவும். அங்கு புல்ஃபிராக்கு வகை தவளைகள் உருவாகின்றன. இதை வைத்து டியாஞ்சி என்ற சிறப்பு சீன உணவு தயாராகிறது. சிங்கப்பூரில் உள்ள ஒரே ஆட்டுப் பண்ணையான தி ஹே டயரிசும், ஃபையர்ஃப்ளை என்ற ஆர்கானிக் உணவுப் பண்ணையும் காணத்தக்க இடங்கள்.
சிங்கப்பூரிலிருந்து உள்ள தொலைவு: 25 கிலோ மீட்டர்
இந்தப் பட்டியலை உங்கள் சட்டைப் பையில் வைத்துகொண்டு, சிங்கப்பூரைச் சுற்றியுள்ள இடங்களை அனுபவியுங்கள்.
Book Your Flight to Singapore Now!
Our 5-Day Ladies Only (+Kids) Trip to Singapore!
Parvathy L S | Aug 21, 2020
I Discovered Many Locations with My Cute Little Family!
Sanjay Talreja | Jun 5, 2020
5 Best Attractions in Singapore for a Fun Family Holiday
MakeMyTrip Holidays | Mar 9, 2020
Honeymoon in Singapore & Malaysia: 4 Ideas to Make it Memorable
MakeMyTrip Holidays | Mar 9, 2020
Offbeat Things to do in Singapore on a Family Vacation
MakeMyTrip Blog | Sep 24, 2019
Best Family Destinations Outside India That You Must Visit!
Devika Khosla | Mar 9, 2020
Singapore Tour Packages: One for Every Traveller
Arushi Chaudhary | Sep 24, 2019
Hotels near Orchard Road in Singapore for an Awesome Shopping Holiday!
Meena Nair | Jan 4, 2021
5 Reasons Why You Should Book a Cruise Holiday Now!
Shubhra Kochar | Mar 25, 2021
A Holiday for Every Mood: 5 Magical Moments You Can Experience Only on Cordelia Cruises!
Supriya Taneja | Mar 31, 2021
7 Unique Destinations for Memorable Two-day Trips from Delhi
MakeMyTrip Holidays | Apr 26, 2024
Why I Did Myself a Favour by Escaping to Landour
Upasana Malik | Apr 27, 2020
Script Your next Weekend Story at Mandawa – The Open Air Art Gallery!
Surangama Banerjee | Apr 11, 2022
Things to Do in Corbett on Your Next Long Weekend
MakeMyTrip Holidays | Mar 9, 2020
Break the Monotony with these Fab Weekend Getaways from Mumbai!
Devika Khosla | Jan 4, 2021
Top Picks for a Luxury Weekend Break from Delhi
Devika Khosla | Sep 27, 2019