வெனிசில் ரொமாண்டிக்காக ஓடத்தில் பயணம் செய்யுங்கள், சுவிட்சர்லாந்தில் உங்களது ராஜ்-சிம்ரன் கனவை நனவாக்குங்கள், லண்டன் ‘ஐ’யில் உங்களது தனி வாகனத்திலிருந்து ஸ்கைலைனை அனுபவியுங்கள். பிரேக்கில் உள்ள இசை நாட்டியத்தின் படிகளில் மொசார்டைப் போல் நடங்கள். உங்களது வாழ்க்கையின் மீதுள்ள காதலுக்காக நீங்கள் ஐரோப்பாவில் அனுபவிக்க வேண்டியவை நிறைய இருக்கிறது. இது அனைத்திற்கும் உச்சமாக, உங்களது விசேஷ மனிதருடன் உங்களது விடுமுறையைக் கழிக்க உதவியாக இந்த ஹோட்டல்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.
அமைதியான இடத்தில் பழைய உலகின் அழகு, நவீன வசதிகளுடன் கைகோர்க்கிறது. இதில் உங்களுக்கு என்ன கிடைக்கும்? பிரேக் நகரில் ஹோட்டல் நெருடாவில் அழகிய சமகால இடம் கிடைக்கும். இன்றைய பயணி விரும்பும் நவீன வசதிகளுடன் சொகுசான தங்கும் வசதியை இந்த ஹோட்டல் அளிக்கிறது.
தி பிரேக் கோட்டையானது நெருடாவிலிருந்து மிக அருகில் உள்ளது. தம்பதிகளுக்கு வரவேற்பு அளிக்கும் ஆச்சரியமூட்டும் சுவையான காலை உணவு சன்மானமாகக் கிடைக்கிறது. நீராவிக் குளியல், நீர்ச்சுழல் விளையாட்டு, மசாஜ் ஆகியவை இங்கு கிடைக்கின்றன. அவர்களது சிறப்பு சூடான சாக்லேட்டை சுவைப்பதற்கான எண்ணற்ற வாய்ப்புகளையும் வீட்டிலேயே பேக் செய்யப்பட்ட உணவுகளையும் அது அளிக்கிறது. இந்த இதமான ஹோட்டல் இனிமையான தேனிலவுக்கு சிறந்த தேர்வாகும்.
விலை: ஓர் இரவிற்கு ரூ.3,580லிருந்து துவங்குகிறது.
இடம்: நெருடோவா 44, 118 00 ப்ரேக் 1, செக் குடியரசு
Book Your Stay at Hotel Neruda
ஹோட்டல் உலகின் அசுரர்களுள் ஒன்று தி டைட்டானிக் சௌசி. உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சொகுசான சொத்துக்கள் இவர்களுக்கு உள்ளன. நீங்கள் பெர்லினில் உங்களது தேனிலவைக் கழிப்பதாக இருந்தால், அந்த நகரத்தின் மையப் பகுதியில் உள்ள முக்கிய ரயில் நிலையத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள இந்த ஹோட்டலை தேர்ந்தெடுப்பது நல்லது. நவீன கலை அருங்காட்சியகமான தி ஹம்பர்கர் பான்ஹாப் இந்த ஹோட்டலில் இருந்து சில நிமிடத் தொலைவில் உள்ளது.
அழகிய கட்டிடக்கலை, தீவிரமான விருந்துகள், அற்புதமான உணவு ஆகியவற்றை அளிக்கும் ஹகேஷர் மார்க்கட் இதன் மறு விளிம்பில் உள்ளது. உங்களது தேனிலவில் பல்வேறு குதூகலங்கள் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதற்கான சரியான தேர்வு ஹோட்டல் டைட்டானிக் சௌசி. இங்கு நீங்கள் விளையாட்டு மற்றும் ஸ்பாக்களில் உங்களது நலத்தை பாதுகாக்கலாம். உடற்பயிற்சி செய்யலாம். இங்கேயே உள்ள உணவகத்தில் மத்திய தரைக்கடல் உணவு வகைகளை சுவைக்கலாம். அவர்களது பிரகாசமான அழகிய அறைகளில் சுகப்படுங்கள்.
விலை. ஓர் இரவிற்கு ரூ.12,804ல் துவங்குகிறது.
இடம். சௌசியட்ரா 30, 10115 பெர்லின், ஜெர்மனி
Book Your Stay at Titanic Chaussee
இங்குதான் வெனிசின் சாராம்சம் ஆடம்பர இன்பம் கிடைக்கிறது. உங்களது தேனிலவைக் கழிக்க அற்புதமான இடம் ஸ்ப்ளென்டிட் வெனிஸ். இந்த பழமைக் கவர்ச்சியுள்ள நகரில் திகைப்பூட்டும்படியான கோணங்களில் 165 அறைகள் உள்ளன. சுவையான இத்தாலிய உணவு வகைகளை அளிக்கும் உணவகம் விடுதிக்கு உள்ளேயே உள்ளது. ஓடங்கள் உங்களைக் கடந்து செல்வதைக் காணலாம். ரியால்ட்கோ பாலம் மற்றும் சான் மார்கோ சதுக்கத்திலிருந்து 5 நிமிடத்தில் நடந்து செல்லும் தொலைவில் உள்ளது. இந்த ஹோட்டல் காதல் ஜோடிகளுக்கு அற்புதமான இடமாகும். உங்களது முன்பதிவின்போது தம்பதிகளுக்கான சிறப்பு சலுகைகளைக் கவனியுங்கள்.
விலை: ஓர் இரவிற்கு ரூ.10,443ல் துவங்குகிறது.
இடம்: சான் மார்கோ மெர்செரி, 760, 30124 வெனெசியா, இத்தாலியா
Book Your Stay at Splendid Venice
வெளியில் பகட்டாக இல்லாமல் ஆடம்பர மற்றும் செழுமை நிறைந்த இடம் ஒன்று உள்ளது என்றால் அதுதான் மே ஃபேர். இலண்டனின் மிகச் சிறந்த ஒரு பழம்பெரும் சொகுசு ஹோட்டல். நீங்கள் முதல்தரமான தங்குமிடத்தையும், இதமான கட்டணத்தையும், அதிசுகமான இடத்தையும் உங்கள் தேனிலவிற்காக தேடிக் கொண்டிருந்தால் அதற்கான இடம் தி மே ஃபேர்தான். நல்ல மதுபானங்கள் அருந்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா, மே ஃபேர் பாருக்குச் செல்லுங்கள். இங்குள்ள மிக்சாலாஜிஸ்டுகள் உங்கள் பானத்தை நன்கு கலந்து தருவார்கள். நீங்கள் இங்குள்ள தனியான உணவருந்தும் அறையில் ஒருவருக்கொருவர் தங்களுக்கான இணையுடனும் அனுபவிக்கலாம் மற்றும் மே ஃபேர் ஸ்பாவில் புத்துணர்ச்சி பெறலாம்.
விலை: ஓர் இரவிற்கு ரூ.18,607ல் துவங்குகிறது
இடம்: ஸ்ட்ராட்டன் தெரு, லண்டன், W1J 8LT, யுனைடெட் கிங்டம்
Book Your Stay at May Fair Hotel
9வது தளத்தில் உள்ள ஒரு அதி நவீன ஹோட்டல் தி ஒலிம்பஸ் ஆஃப் தி மார்டல்ஸ். இது ஏதென்சில் அக்ரோபாலிசையும் லிகாபெட்டஸ் மலையையும் நோக்கியுள்ளது. அற்புதமான கிரேக்க தேனிலவை நீங்கள் அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்கான இடம் இதுதான். கிரேக்க பாராளுமன்றம், தேசிய தொல்பொருள் அருங்காட்சயகம் மெலி அடெனாஸ் ஆகியவற்றிலிருந்து கல் எறியும் தூரத்தில் இந்த ஹோட்டல் உள்ளது.
வசதியாக தங்குவதற்காக இங்குள்ள சின்னஞ்சிறு அறைகளில் உங்களுக்கு தேவையான எல்லாவிதமான வசதிகளும் செய்த தரப்பட்டுள்ளன. நீராடுவதற்கான விடுதி உள்ள ஆரோக்கிய க்ளப், மொட்டை மாடி நீச்சல் குளம், பல்வேறு விதமான உள்ளமைப்பு உணவகங்கள் ஆகியவை இவற்றில் உள்ளன. இந்த நகரின் சிறந்த காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை இந்த ஹோட்டல் பெற்றுத்தருகிறது. நீங்கள் ஏதென்சை சுற்றிப்பார்க்க விரும்பினால், ஏதென்சில் உள்ள மற்ற உணவகங்களில் உங்களுக்காக முன்பதிவு செய்கிறது.
விலை: ஓர் இரவிற்கு ரூ.5,307ல் துவங்குகிறது
இடம்: 14 சால்கோகொண்டிலி மற்றும் 28வது அடோபர் ஏவ் , ஏதென்1
Book Your Stay at Melia Atenas
நீங்கள் உங்கள் அன்புக்குரியவருடன் பயணம் செல்ல வேண்டும் என்று விரும்பினால் அதற்கான சிறந்த தேர்வு இந்த ஹோட்டல். இது பார்சிலோனோவின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டின் கட்டிடமான இது 9வது மாடியில் அமைந்துள்ளது. நவீன கட்டிடக்கலையுடன் சமகாலத்தின் சின்னஞ்சிறு அலங்காரங்களையும் பெற்று ஹோட்டலாக உருமாற்றம் பெற்றுள்ளது. காதிக் க்வார், பாசிஜ் டி ரேசியா, ப்ளாகா காடாலுன்யா ஆகியவற்றிற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த நகரை நன்கு சுற்றி பார்க்கவேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இது அற்புதமான இடம். சொகுசான அறைகள், இதைச் சுற்றியே இந்த நகரைச் சுற்றிப்பார்ப்பதற்கான காட்சிகள், அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் மதுபான அருந்தகம், உணவகம் ஆகியவை உள்ளன. வேறென்ன தேவை.
விலை: ஓர் இரவிற்கு ரூ.5,308லிருந்து துவங்குகிறது.
இடம்: ரொண்டா யுனிவர்சிடாட், 21, இ 08007- பார்சிலோனா மையம், பார்சிலோனா
ஐரோப்பாவில் உள்ள சிறந்த ஹோட்டல்களின் பட்டியல் தற்போது உங்களிடம். உங்கள் அன்பிற்குரியவருடன் நேரத்தை செலவிட, உங்களது தேனிலவைத் திட்டமிட்டுக் கழியுங்கள்.
Best Hotels in Prague: 3 for Every Budget!
Neha Mehta | Jan 4, 2021
4 Stunning Destinations in Eastern Europe Which You Must Explore
Deepa N | Sep 24, 2019
Nidhi Dhingra | May 29, 2017
Best Hotels in Europe for Honeymooners!
Chandana Banerjee | Sep 1, 2020
My 7 Memorable Eats from Across the World
Kalyan Karmakar | Apr 3, 2017
5 Facts That Will Make You Want to Visit the Czech Republic
Mikhil Rialch | Apr 3, 2017
Top Five Experiences in Prague
Saurav Prakash | Apr 3, 2017
Mikhil Rialch | Apr 3, 2017
Encounter MP’s Wildlife Wonders at These Wow Jungle Resorts!
Surangama Banerjee | Mar 3, 2020
Experience Seekers Alert! These 7 Dreamy CGH Earth Resorts Are for You
Surangama Banerjee | Dec 26, 2019
Luxury Hotels in New South Wales that Offer the Best Window Views
Namrata Dhingra | Oct 17, 2019
Your Guide to Enjoying the Best Daycation in Delhi NCR!
Devika Khosla | Mar 17, 2020
Live the Luxe Life with an Experiential Stay at the Postcard Hotels!
Tabassum Varma | Aug 9, 2019
Pick These Unconventional Properties, to Holiday in Goa the Postcard Way!
Sunny Mishra | Aug 21, 2019
Whispering Palms Beach Resort Goa: A Dreamy Beachfront Stay
Surangama Banerjee | May 6, 2019
Top Hotels in Navi Mumbai for a Splendid Stay
Tabassum Varma | Apr 30, 2019