மும்பையின் இரைச்சலும் அவசரச் சூழலும், வார இறுதியிலாவது அந்த நகரிலிருந்து வெகுதூரம் சென்று அமைதியான சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்ற ஏக்கத்தை மும்பைவாசிகளுக்கு ஏற்படுத்தும். நீங்கள் ஏதாவது சாகசப் பயணத்திற்காக நகரை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கிறீர்களா அல்லது சற்று நேரம் இயற்கையின் மடியில் அமைதியாக நேரம் கழிக்க விரும்புகிறீர்களா, நாங்கள் 10 பிரியமான பிக்னிக் (சுற்றுலா) தளங்கள் கொண்ட பட்டியலை அளிக்கிறோம். மும்பைக்கு மிக அருகில் உள்ள இவை உங்கள் எதிர்பார்ப்புகளைப் பொய்க்கச் செய்யாது.
மும்பையிலிருந்து 230 கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ள இந்த திராட்சை தோட்டத்தில் நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ள முடியும். உங்கள் நவநாகரிகத்தை புத்துணர்ச்சி கொள்ளச் செய்ய முடியும். உங்களுக்கு திராட்சையிலிருந்து கோப்பை அனுபவம் வேண்டுமா, திராட்சைத் தோட்டத்தையும் ஒயின் தொழிற்சாலையையும் முழுமையாக சுற்றிப்பார்க்க வேண்டுமா, அல்லது சூலா பியாண்டில் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டுமா, சூலா ஒயின்யார்டுக்கு வாருங்கள்.
சூலா ஒயின்யார்டில் உள்ள தனித்துவமான சொந்த வில்லாக்கள், வார இறுதி தங்குதலுக்கு உங்களுக்கு அற்புதமான வார இறுதி அனுபவத்தைத் தருகிறது. கஃபே ரோஸ் அவர்களது உணவகம். நாள் முழுவதும் இயங்கும் இந்த உணவகத்தில ஒரு குளியல் போடுங்கள். இந்த கிராமத்து சாலைகளில் ஒரு சைக்கிள் பயணம் செல்லுங்கள்.
நீங்கள் சூலாவுக்கு செல்லும் வழியில், சுற்றுவழியில் சென்றால், வைதர்னா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள மோதக் சாகர் அணை எனப்படும் வைத்தர்னா அணைக்கு செல்லலாம். நாசிக் மாவட்டத்தின் இகாத்புரியில் உள்ள இந்த அணை மும்பைக்கு தண்ணீர் வழங்குகிறது. இதன் கண்கவர் சுற்றுப்புறமும் இங்குள்ள அழகிய ஏரியும் மிகவும் பிரபலம்.
மகாராஷ்டிராவில் ராய்கட் மாவட்டத்தில் கோலாட்டில் உள்ள சாகச மையம் இது. குண்டலிக்கா நதியின் வெள்ளை நீரில் கட்டுமரப் பயணம் செய்வதற்கும் அதன் பாதை வளைவுகளில் செல்வதும் சாகசம். சயாத்திரி மலைத் தொடரில் அமைந்துள்ள கோலாட் மும்பையிலிருந்து 121 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. சாகச நடவடிக்கைகள் நிறைந்து வழியும் மையம் இது. கட்டுமரப் பயணத்தைத் தவிர, தோணிப் பயணம், துடுப்புப் படகுப் பயணம், பேராக்ளைடிங் (படகுடன் இணைந்துள்ள பாராசூட் பயணம்), மலை ஏறுதல், ஆற்றின் படுகையோரத்தில் சென்று ஆற்றைக் கடத்தல், நீர்வீழ்ச்சியின் உச்சியிலிருந்து குதித்தல், மலைப்பகுதியில் பைக் ஓட்டுதல் ஆகிய சாகச நடவடிக்கைகளால் கோலாட்டிற்கு சாகசப் பயணக்காரர்கள் அதிகமாகச் செல்கின்றனர். தேனை நாடிச் செல்லும் தேனியைப் போல் கோலாட்டிற்கு சாகசக்காரர்கள் செல்கிறார்கள்.
மும்பையிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அமைதியான மலை வாசஸ்தலம் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த ஸ்தலம் கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த சுற்றுச்சூழல் உணர்வு மிக்க பிராந்தியம், உலகிலேயே தானியங்கி வாகனங்கள் தடைசெய்யப்பட்ட இடங்களில் மிகச் சில இடங்களில் ஒன்று. இதனால் இதன் அமைதி நீடித்து நிலைக்கிறது. நீங்கள் இங்கு இருக்கும்போது இங்குள்ள மரப்பகுதிகளில் நீண்ட பயணம் செல்லலாம். குதிரை முதுகில் நகரம் முழுவதும் சவாரி செய்யலாம். லூயிசாவுக்கும் ஹனிமூன் பாய்ண்டிற்கு இடையில் ஜிப்லைனிங்கை முயற்சி செய்யலாம். மலைவாசஸ்தலத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிடலாம். சார்லட்டோ ஏரிக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தளத்தில் நேரத்தைச் செலவிடலாம்.
பறவைகளைக் கண்காணித்தல், இயற்கை நடைபயணம், கர்னாலா கோட்டைக்கான பயணம் ஆகியவற்றை சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் கர்னாலாவிற்கு வரலாம். பன்வெல்லிலிருந்து 12 கிலோ மீட்டர்கள் தொலைவில் கர்னாலா பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இது 12.11 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. 150 பறவை வகைகள் கொண்ட சிறிய மாணிக்கம் இது. இதில் 37 வகையான புலம்பெயர் பறவைகள் உள்ளன. கர்னாலா கோட்டையை யாதவர்கள் கட்டியுள்ளார்கள். இதனை பின்னர் துக்ளக் கைப்பற்றினார். இங்குதான் நீங்கள் அவசியம் பயணிக்க வேண்டும். இந்த மலையை ஏறுவதற்கு ஒரு மணி நேரம் ஆகலாம். நீங்கள் கோட்டையை அடைந்த பிறகு மும்பைத் துறைமுகத்தின் கண்கொள்ளா காட்சிகளைக் காணலாம்.
மும்பையிலிருந்து வெறும் 96 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. இந்த மலைவாசஸ்தலத்தில மூச்சடைக்கச் செய்யும் கண்கவர் காட்சிகள் உள்ளன. மும்பைவாசிகள் எளிதில் அடையக்கூடிய சுற்றுலாத்தளம் இது. இங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் மலையின் எழிலையும் சமவெளிகளையும் காணலாம். சிவாஜியின் பிரபலமான கோட்டையான ராஜ்மாச்சியின் கம்பீரமானத் தோற்றத்தை அளிக்கிறது ராஜ்மாச்சி புள்ளி. பயணிகள் அதிகம் பயணிக்கும் இடம் புலித்தாவல் என்றழைக்கப்படும் புலிப் புள்ளி. மழைப் பொழிவின்போது மட்டும் நன்கு பொழியும் சிறிய நீர்வீழ்ச்சியும் அதன் ஆழமான 650 மீட்டர் சரிவும், இயற்கை விரும்பிகள் காண வேண்டியவை.
மும்பையிலிருந்து 102 கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ள இதமான கடற்கரைக் கிராமம். கேட்வே ஆஃப் இந்தியா பகுதியிலிருந்து படகு சவாரி மூலம் இந்தக் கடற்கரைக்கு செல்லலாம். இந்த மாண்ட்வா கிராமமானது வெப்பமான கடற்கரைகள், நீர் விளையாட்டுக்கள், சுவையான உணவு ஆகியவற்றிற்குப் பிரபலம். இந்த வார இறுதிக்காக நீங்கள் இங்கு ஒரு நாள் சுற்றுக்கு வருகிறீர்களா, அல்லது இந்த உறங்கும் கிராமத்தை சுற்றித் திரிந்து உங்கள் பொழுதைக் கழிக்கிறீர்களா, அல்லது பழைய ஆர்சிஎப் ஜெட்டியில் உள்ள சுற்றுப்புறத்தில் மூழ்கிப் போயுள்ளீர்களா, மாண்ட்வா கடற்கரையில் நடைபயில்கிறீர்களா, அல்லது அங்குள்ள உள்ளூர் மீனவர்களிடம் உரையாடுகிறீர்களா, எதைச் செய்தாலும் மகிழ்ச்சிதான்.
கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து படகு மூலம் கடலில் சென்றால் மும்பைக்கு கிழக்குப் பக்கம் உள்ளது எலிபெஃண்டா தீவு. இங்கு கையாலேயே வரையப்பட்ட சுவர் ஓவியங்களுடன் ஏழு பண்டைய குகைகள் உள்ளன. இவை அஜந்தா, எல்லோரா குகைகளுக்கு ஒப்பானவை. இதைக் கண்ட பிறகு நீங்கள் பீரங்கி மலைக்குச் செல்லலாம். மலை உச்சியில் பீரங்கிகள் உள்ளன. அதனைக் கண்டு வரும்போது பட்டினி உங்களை வாட்டும். உங்கள் மனம் இந்தச் சுற்றுலா சிறு தளத்தில் உணவுக்காக ஏங்கும். குரங்குகள் அடிக்கடி வராத இடமாகப் பார்த்து அமர்ந்து உணவு உண்ணுங்கள்.
சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் கிழக்குப் பகுதியில் இது அமைந்துள்ளது. இந்த ஏவூர் மலைகள் 6 சிறிய கிராமங்களுக்கும் பழங்குடியினருக்கும் இருப்பிடமாக உள்ளது. நீர்வீழ்ச்சியுடன் உள்ள கண்கவர் ஆபரணம் இந்த இடம் அடர்ந்த காணகப்பகுதியாக உள்ள இது, இயற்கை விரும்பிகளுக்கான சொர்க்கம். இந்தக் காட்டுப் பகுதியின் உள்ளே நடைபயணம் செல்வார்கள் இயற்கை விரும்பிகள். பள்ளி குழந்தைகள் மற்றும் பறவை கண்காணிப்பாளர்கள் இங்கு அடிக்கடி வருகை புரிகிறார்கள். ஏவூர் மலைகளில் ஒரு சில ஓய்விடங்கள் உள்ளன. இங்கு நீங்கள் ஓய்வெடுத்துக்கொண்டு இதழ் இனிக்கும் உணவுகளை உண்டு களியுங்கள். மும்பையிலிருந்து வெறும் 25 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள இந்த இடம் மும்பைவாசிகள் எளிதில் அடையக்கூடிய சுற்றுலாத்தளம்.
ஒரு நாள் முழுவதும் சாகசமும் செயல்பாடுகளும் நிறைந்திருக்க வேண்டுமா, சிக்கனமாக அதே சமயம் குதூகலமாக உங்கள் வீடுமுறையைக் கழிக்க வேண்டுமா அதற்கான இடம் ஆம்பி பள்ளத்தாக்குதான். 10,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த இடம். உள்புற வெளிப்புற விளையாட்டுக்கள் நிறைந்தது. லோனாவலாவிலிருந்து 30 நிமிடங்கள் பயணத் தொலைவிலும் மும்பையிலிருந்து 105 கிலோ மீட்டர்கள் தொலைவிலும் உள்ளது. ஆம்பி பள்ளத்தாக்கில் 7 நட்சத்திர உணவகமும், 18 துளை கொண்ட கோல்ஃப் மைதானமும், நவீனமான தண்ணீர் பூங்காவும், தனித்துவமான குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளன. மிகவும் பணிச்சுமையான வாரத்தின் இறுதியில் உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஏற்ற சுற்றுலாத்தளம் இது.
ஒரு காலத்தில் பணி ஓய்வு பெற்றவர்கள் சென்று வாழத்தகுந்த இடமாக உள்ள பஞ்ச்கனி, தற்போது மும்பைவாசிகள் மற்றும் புனேவாசிகளுக்கு சுற்றுலா செல்லும் இடமாக உள்ளது. சகாயதரி மலைத்தொடரின் கிராமங்களுக்கும் ஐந்து குன்றுகளுக்கும் மத்தியில் அமைந்துள்ள இந்த ஊர் மும்பையிலிருந்து 285 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. இது உடல்நலத்திற்கு உகந்த காலநிலை கொண்டது. இங்கிருந்து நீங்கள் தோம் தாம்மைக் காணுமாறு உள்ள சிட்னி மையத்திற்குப் பயணம் புரியவும். இங்குள்ள பேய்களின் அடுப்படியில்தான் (புராணக்கதைகளின் படி) பாண்டவர்கள் சில காலம் கழித்துள்ளனர். இங்குள்ள பார்சி மையத்திலிருந்து பார்த்தால் கிருஷ்ணா பள்ளத்தாக்கின் அற்புதமான காட்சி கிடைக்கும். பஞ்ச்கனியை குறித்து நாம் தெரிந்து கொள்ளவிருக்கும் மற்றொரு முக்கியமான அம்சம் இங்குள்ள எரிமலை பீடபூமி. இது ஐந்து குன்றுகளிலும் மிகவும் உயரமாக உள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது அதிக உயரமான பீடபூமி. திபெத் பீடபூமிக்கு அடுத்தபடியாக உயரமான பீட பூமி.
எனவே மும்பைவாசிகள், நீங்கள் சுற்றுலா செல்ல ஆர்வமாக உள்ளீர்களா, உங்கள் வார இறுதியை அனுபவிக்க அற்புதமான இடம் வேண்டுமா, எங்கள் பட்டியலில் இருந்து ஓர் இடத்தைத் தேர்ந்தெடுங்கள். உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு தயாராக இருங்கள்.
Book Your Flight to Mumbai Now!
5 Reasons Why You Should Book a Cruise Holiday Now!
Shubhra Kochar | Mar 25, 2021
A Holiday for Every Mood: 5 Magical Moments You Can Experience Only on Cordelia Cruises!
Supriya Taneja | Mar 31, 2021
Take a Quick Break from Mumbai to These Fabulous Pool Villas!
Garima Jalali | Nov 18, 2020
Travel to These Places in the World to Catch on the Hip-Hop Vibe!
Ashish Kumar Singh | Jul 18, 2019
Check out These Celebrity Hotspots in Mumbai! Brace Up to Get Star Struck
Surangama Banerjee | Jul 12, 2019
Would You like to Stay in a Floating Tent? Well, You Can!
Surangama Banerjee | Jun 7, 2019
The Best Places in Mumbai: There's Something for Everyone!
Ashish Kumar Singh | Apr 10, 2019
India’s First Luxury Cruise from Mumbai to Goa Is Here!
Neha Sharma | Apr 26, 2024
Drive, Chip and Putt in UAE’s Capital—Abu Dhabi!
Surangama Banerjee | May 1, 2025
Discover the Spiritual Heart of Australia—Uluru!
Niharika Mathur | May 1, 2025
Embark on a Spicy & Saucy Adventure Through Queensland’s Tastiest Corners!
Surangama Banerjee | Apr 10, 2025
Top Spots to Witness Wildlife in Queensland, Australia: From Koalas to Humpback Whales
Surangama Banerjee | Apr 10, 2025
Dive into the Abu Dhabi Story Through Its Iconic Landmarks
Surangama Banerjee | Apr 9, 2025
Say Yes to a Retail Therapy in Abu Dhabi!
Surangama Banerjee | Apr 11, 2025
Chase Thrilling Adventure Activities on Yas Island in Abu Dhabi
Surangama Banerjee | Feb 27, 2025
Experience an Arabian Beach Vacay in Abu Dhabi
Surangama Banerjee | Feb 27, 2025