பட்ஜெட் பயணிகளுக்கு ஏற்ற 5 பெங்களூர் ஹோட்டல்கள்

Namrata Dhingra

Last updated: Jun 28, 2017

Want To Go ? 
   

தனது ரம்யமான காலநிலையினால், பெங்களூர் ஆண்டு முழுவதும் அதிகமாகப் பயணிகளைப் பெறும் நகரமாக உள்ளது. இதன் அழகிய பூங்காக்கள், இராஜ கம்பீரம் மிக்க அரண்மனைகள், மகத்துவமான கோவில்கள், பிரபலமான இரவு வாழ்க்கை, இசை நிகழ்ச்சிகள், வளர்ந்துவரும் தொழில்நுட்ப தொழில்துறை, ஆகியன சுற்றுலாப் பயணிகளையும் உள்ளுர்வாசிகளையும் ஒருசேர கவரும் தன்மை கொண்டவை. இந்த பெருநகரத்திற்கு என்று அதீத கவர்ச்சி உள்ளது. இதனால் உங்களது பயணத்தை நீட்டித்து நீங்கள் அதிக நாட்கள் தங்குவதற்கும் அல்லது மேலும் தேவை என்று திரும்பத் திரும்பப் பயணிப்பதற்கும்  தோன்றும்.

நீங்கள் பணிக்காகவோ அல்லது ஓய்விற்காகவோ பயணம் செய்யும்போது உங்களது பயணத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். பெங்களூரில் உள்ள பட்ஜெட் ஹோட்டல்களின் பட்டியலிலிருந்து  வசதியான, அதே சமயம் சிக்கனமான பயணத்தைத் தேர்ந்தெடுங்கள்.

ரமீ கெஸ்ட்லைன் ஹோட்டல் 

ramee-guestline-bangalore

 “சிறந்த பசுமையான தங்குமிடம்” என்ற 2016ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய பயண விருதை இந்த ஹோட்டல் பெற்றுள்ளது.  இந்த 4 நட்சத்திர விடுதியானது நளினமான அறைகள் மற்றும் தங்கும் விடுதகளை சிக்கனமான விலையில் வழங்குகிறது.  இதன் நவீன வசதிகள், இலவச வைஃபை வசதி, சன்மானமாக வழங்கப்படும்  காலை உணவு, நீச்சல் குளங்கள், உள்புற வெளிப்புற விளையாட்டுக்கள், ஜிம் மற்றும் ஸ்பா வசதிகள் ஆகியவை வசதியான சாவகாசமான  தங்கும் வசதியை அளிக்கின்றன.  

பெங்களூரிலிருந்து சிறிய தொலைவில் உள்ள இந்த ஹோட்டலானது, மின்னணு நகரம், தொழில் மையமான ஹோசூர், பொம்மசந்திரா ஆகியவற்றிற்கு மிக அருகில் உள்ளது. வார இறுதி சுற்றுலாக்களுக்கும் வணிகப் பயணங்களுக்கும் இந்த ஹோட்டல் மிகவும் உகந்தது. இதன் 6 மாநாட்டு அறைகள், விரிந்த பரப்பளவு கொண்ட தோட்டங்கள் ஆகியவை  மாநாடுகள், திருமணங்கள் மற்றும் இதர சமூக கூட்டங்களுக்கு ஏற்ற இடவசதியையும் மற்ற வசதிகளையும் அளிக்கின்றன. தேர்ந்தெடுக்கக்கூடிய பல்வேறு கூட்டுத் தங்கும் வசதிகளையும் ஒப்பந்தங்களையும் ரமீ கெஸ்ட்லைன் அளிக்கிறது.  இதனை புக் செய்யும்போது எந்தவிதமான பாதுகாப்போ அல்லது கிரெடிட் கார்டு விவரமோ தேவை இல்லை. எனவே உங்கள் பயணத்தை நன்கு தங்கி அனுபவிக்கவும். நீங்கள் வெளியேறும்போது பணம் செலுத்தினால் போதும்.

 இடம்: ப்ளாட் எண் 1 & 2,  கேஐஏடிபி இண்டஸ்ட்ரியல் ஏரியா, அட்டிபெலே, பெங்களூர்

 விலை: ஓர் இரவிற்கு ரூ.3,500லிருந்து ஆரம்பிக்கிறது.

Book Your Stay at Ramee Guestline Hotel, Bengaluru!Book Your Stay at Ramee Guestline Hotel, Bengaluru!

ஸ்டெர்லிங்ஸ் மேக் ஹோட்டல் 

sterlings-mac-hotel-bangalore

இந்த 5 நட்சத்திர ஹோட்டல்  வணிக மையத்தின் மத்தியில் அமைந்துள்ளது. வணிகம் மற்றும் ஓய்வுக்காகப் பிரயாணம் செய்யும் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை இந்த ஹோட்டல் அளிக்கிறது. இதன் நேர்த்தியான, எழில்நயம் வாய்ந்த  ஆசிய கட்டிடக்கலையும் அதன் பிரமாண்டமும்  நவீன வசதிகளுடன் பிண்ணிப் பினைந்துள்ளன.  நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், மொழிபெயர்ப்பு சேவைகள்,  உள்ளறை பாதுகாப்பு, அதி நவீன பாதுகாப்பு அம்சங்கள், நன்கு தொடர்புடைய போக்குவரத்து வசதி ஆகிய நவீன வசதிகள் இவற்றுள் அடங்கும். எல்லாவிதமான நவீன தொழில்நுட்பங்கள், சந்திப்பு அறைகள், பெருவிருந்து கூடங்கள், மண்டபம் போன்ற பகுதி  ஆகியவை இணைந்த 24 மணிநேர வணிக மையம் உள்ளது. இது மாநாடுகள், தனி நபர் நிகழ்ச்சிகள், சமூக குழுமங்கள் ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருக்கும்.

பல்வேறு விதமான உணவுமுறையைத் தேர்ந்தெடுத்து உண்ணும் வசதி இங்கு உண்டு. எனவே அங்குள்ள உணவகத்திற்குச்  செல்லவும். 24x7  மணிநேரமும் இயங்கும் பல்வேறு விதமான உணவுகள் கொண்ட உணவகம், அருந்தகம் (சிற்றுண்டிச் சாலை), மதுபானம் அருந்தகம் (பார் வசதியுடன்) மற்றும் உத்தரவாதமான அராபிய உணவகம் ஆகியவை உங்கள் நாவின் சுவை அரும்புகளுக்கு பரவசமளிக்கும்.

இடம்: 135, ஹெச்ஏஎல் ஏர்போர்ட் சாலை, கோடிஹள்ளி, பெங்களூர்

விலை: ஓர் இரவுக்கு ரூ.4,900லிருந்து துவங்குகிறது.  

Book Your Stay at Sterlings Mac Hotel, Bengaluru!Book Your Stay at Sterlings Mac Hotel, Bengaluru!

ஹோட்டல் சன்ரே

hotel-sunray-bangalore

பிரஸ்டிச் டெக் பார்க்கிற்கு எதிரே உள்ளது. எம்பசி டெக் கிராமம், செஸ்னா டெக் பார்க், ஈகோஸ்பேஸ், ஈகோ வேர்ல்ட், உள்ளிட்ட மற்ற தொழில்நுட்ப பார்க்குகளிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ளது ஹோட்டல்  சன்ரே. இது பெருநிறுவன பயணிகளுக்கான தரமான தங்கும் இடம். தனியாக அமரும் பகுதி உள்ள குளிர்சாதன வசதி நிறைந்த அறைகள், இணைய வசதி, சன்மானமாக அளிக்கப்படும் காலை உணவு, சக்கர நாற்காலி வசதி, ஆகியவை உள்ளிட்ட நவீன வசதிகள் இங்கு உள்ளன.  இதன் சிக்கனமான விலையினால் இது மிகவும் பிரபலம்.  மேலும் முழுவதுமாக உபகரணங்கள் உள்ள உடற்பயிற்சி மையம், நவீன தொழில்நுட்பமும் உபகரணங்களும்  கொண்ட மாநாட்டு அறைகள், ஆகியன இங்கு உள்ளன.

இங்குள்ள பல்வகை  உணவு வழங்கும் உணவகம் ஃபெனிக்ஸ். இதில் கட்டணத்துடன் உள்ள உணவுப் பட்டியலும், மதிய மற்றும் இரவு உணவுக்காக கூட்டுணவு விருந்துகளும் (பஃபே) உண்டு. சமூக கூடங்களுக்கான மாபெரும் இடம் இது. இந்த பட்ஜெட் ஹோட்டலில் செல்லப் பிராணிகளுக்கான  இடமும் உண்டு. எனவே நீங்கள் உங்கள் பணி நிமித்தமாகவோ அல்லது இளைப்பாறவோ பயணிக்கும்போது உங்கள் செல்லப்பிராணிகளையும் கொண்டு செல்லலாம்.

இடம்: பிரஸ்டீஜ் டெக் பார்க்கிற்கு எதிரில், மாரத்தஹள்ளி அவுட்டர் ரிங் ரோடு, காடுபீசனஹள்ளி, பெங்களூர்.

விலை: ஓர் இரவிற்கு ரூ.2,000லிருந்து துவங்குகிறது.

Book Your Stay at Hotel Sunray, Bengaluru!Book Your Stay at Hotel Sunray, Bengaluru!

ஹோட்டல் ஸ்டே ஈசி மெஜஸ்டிக் 

hotel-easy-stay-majestic

இந்த 3 நட்சத்திர ஹோட்டல், தான் அமைந்துள்ள இடத்தினால் எல்லாவிதமான பயணிகள் மத்தியிலும் பிரபலம். பெங்களூர் நகர சந்திப்பு ரயில்வே நிலையத்திற்கும் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. இதனால் நகரின் முக்கியமான கவரும் இடங்கள், சுற்றுலா தளங்கள், மற்றும் நகரத்தின் மற்ற பாகங்களுக்கும் செல்வது எளிது. இதன் வலதுபுறத்தில் மிகவும் பிரபலமான ஹஸ்ரத் டாவாக்கால் மஸ்தான் ஷா தர்கா உள்ளது.

இந்த பட்ஜெட் ஹோட்டலானது, அவரவர் தேவைகேற்ப  பல்வேறு விதமான அறை வசதிகளை வழங்குகிறது. இதில் இலவச வைஃபை உள்ளிட்ட நவீன வசதிகள், சமமான திரை கொண்ட தொலைக்காட்சிகள், மேசைகள், அமரும் இடங்கள், பால்கனிகள் ஆகியவை உள்ளன. இவை மட்டுமல்லாமல், இந்த ஹோட்டலுக்கென்று இலவச பார்க்கிங் வசதி, சலவை வசதி, ஓய்விடம், பெரு நிறுவன சந்திப்புகள், சமூக நிகழ்வுகள், குழுக்கள் ஆகியவற்றிற்காக இரண்டு பெருவிருந்து கூடங்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. உங்களது வட இந்திய உணவு தாகங்களை திருப்தியடையச் செய்ய, இங்குள்ள வடஇந்திய சைவ உணவகமான, ரிசாலோ பராத்தா ஹௌஸ்ஸில் உணவருந்தவும்.

இடம்: 415, பழைய தாலுக் கச்சேரி சோலை, ஹஸ்ரத் தவக்கல் மஸ்தான் தர்காவிற்கு எதிரில், உப்பார்பேட்டே, சிக்பேட், பெங்களூர்.

விலை: ஓர் இரவிற்கு  ரூ. 1,700 லிருந்து துவங்குகிறது.

Book Your Stay at Hotel Stay Easy Majestic, Bengaluru!Book Your Stay at Hotel Stay Easy Majestic, Bengaluru!

ஐலாட்ஜ் மல்லேஸ்வரம் 

iLodge-Malleshwaram-Bangalore

பட்ஜெட்டிற்கு நட்பாக உள்ள இந்த ஹோட்டல் அதன் சிக்கனமான விலைக்காக மட்டுமல்ல, நகர மையத்தில் உள்ள அதன் பிரதான இடத்திற்காகவே பிரபலம். இரயில்வே நிலையமும் பேருந்து நிலையமும் இதற்கு மிக அருகில் உள்ளன. இதனால் சுற்றுலா தளங்களுக்கு எளிதில் செல்ல முடியும்.  எண்ணற்ற கடைவீதிகளும் ஷாப்பிங் மால்களும் உணவங்களும் இதைச் சுற்றிலும் உள்ளன. சில சில்லறை சிகிச்சைகளுக்கான மந்த்ரி மால் அருகில் உள்ளது. சம்பிகே தியேட்டரில் நீங்கள் சினிமாவும் பார்க்கலாம்.  இதே கட்டிடத்தில் உள்ள பிரபலமான மாவல்லி டிஃபன் அறைகள், அதன் தென்னிந்திய சிறப்புணவுகளுக்காகக் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியவை.

நவீன வசதிகளான தட்டையான திரைகொண்ட தொலைக்காட்சி வசதிகள், ஏர் கண்டிஷனர் வசதி, இலவச வைஃபை, சூடான குளியல் வசதி, உள்ளறை பாதுகாப்பு, பணி மேசைகள் ஆகியவற்றை ஐலாட்ஜ் அளிக்கிறது. இதன் .சுத்தம், வசதிகள், சிக்கனமான கட்டணங்கள்,  ஆகியவற்றால் பெங்களூருக்கு வரும் பெரிய குழுமத்திற்கு இந்த ஹோட்டல் சிறந்தது. குடும்ப விழாக்கள், கோவில் யாத்திரைகள், பெருநிறுவன பயணிகள் ஆகியவற்றிற்காக வருவோருக்கும் இந்த ஹோட்டல் மிகவும் சிறந்தது. 

இடம்: 8 சம்பிகே சாலை, மந்த்ரி மால் அருகில், ஜிஆர்டி நகைக்கடை எதிரில், பெங்களூர்.

விலை : ஓர் இரவிற்கு ரூ.2,000லிருந்து துவங்குகிறது.

Book Your Stay at iLodge Malleshwaram, Bengaluru!Book Your Stay at iLodge Malleshwaram, Bengaluru!

 எனவே உங்களது பட்ஜெட்டில் பெங்களூருவை சுற்றிப்பார்க்க, உங்களது முதுகுப்பையைத் தூக்கிகொண்டு புறப்படவும்.