பூட்டானில் விடுமுறையைக் கழிக்க நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்

MakeMyTrip Blog

Last updated: Dec 6, 2017

Author Recommends

See

Thimpu: Takin, the national animal of Bhutan at the Motithang Takin Preserve
Punakha: The ‘one hundred pillar hall’ at Punakha Dzong with its exquisite murals
Bumthang: Membartsho or the 'Burning Lake', one of the biggest pilgrimage spots of Bhutan

Do

Paro: Go for the Snowman Trek, one of the most challenging and adventurous treks in the world

Eat

Binge on pancakes, noodles, rice and ema datsi at Phuenzi Diner

Click

Punakha: Visit Chimi Lhakhang to click pictures of baby monks in training
Phuntsholing: Get yourself clicked at the ornate border gate between Bhutan and India
Trongsa: Click the magnificent Black Mountains from the Trongsa Dzong

Trivia

Did you know the first foreign tourists were allowed into Bhutan in 1974?

Want To Go ? 
   

இமய மலைகளில் முடிந்துகொள்ளப்பட்டுள்ள பூட்டான் பல்வேறு ஆண்டுகளாகவே நாட்டுப்புற கதைகளாலும் அதிசயங்களாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நாட்டில்தான் வெற்றியானது தேசிய ஒட்டுமொத்த உள்நாட்டு மகிழ்ச்சியின் மூலம் அளவிடப்படுகிறது. இங்கு பௌத்த முறையிலான வாழ்க்கை நவீனத்தை சந்திக்கிறது. கண்கவரும் இமயமலைக் காட்சிகள், அமைதியான பௌத்த மடாலயங்கள் மற்றும் நகைச்சுவை விரும்பும் மக்கள் என்று பூட்டான் பல்வேறு ஸ்தலங்களின் இருப்பிடமாக உள்ளது.

உங்கள் மனதில் புத்துணர்வுள்ள விடுமுறை தேவை என்ற நினைக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் பூட்டானிற்கு செல்லவேண்டும். அதற்கான காரணங்கள் இதோ. 

ஏன் பூட்டானில் விடுமுறையைக் கழிக்க வேண்டும்? 

dzong-bhutan

பூட்டான் கடைசி இமயமலை சாம்ராஜ்ஜியம். எனவே அதனை கடைசி சங்ரிலா என்று அழைப்பது பொருந்தும். இங்குள்ள மூச்சடைக்கும் இமயமலைக் காட்சிகளைக் கண்டுகளியுங்கள். பனி படர்ந்த மலைத்தொடர்கள் பசுமையான புல்வெளிகளுடனும் அடர்ந்த காடுகளுடனும் இணைந்திருக்கும். இங்குள்ள கண்கவர் காட்சிகள் சுத்தமான காற்றை கொண்டுவரும். உலகின் முதல் கார்பன் நெகடிவ் நாடு பூட்டான் என்றால், அதில் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் அந்நாடு வெளியிடும் கார்பனை விட அதிக கார்பனை அந்நாடு உள்வாங்குகிறது.

 ஒவ்வொரு பயணிக்கும் பூட்டான் ஏதோ ஒன்றை அளிக்கிறது. எனவே இந்தியர்கள் மகிழ்வதற்கு அங்கு நிறையவே உள்ளது. இந்தியர்களுக்கு வரும்போதே விசா கிடைக்கும். ராயல்ட்டி கட்டணங்கள் கிடையாது (மற்ற நாட்டினர் பூட்டானில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு 250 அமெரிக்க டாலர்கள் கட்ட வேண்டும்). இது எளிதான விடுமுறை தலம். இந்திய சுவை கொண்ட உணவுகளை சுவைக்கும்போதும் இந்திய நாணயத்தை பயன்படுத்தும்போதும் நீங்கள் உள்நாட்டில் இருப்பது போலவே உணர்வீர்கள். பூட்டானியர்கள் உங்களை இன்முகத்துடன் வரவேற்பர். அவர்களில் பலர் இந்தி மொழியை புரிந்துகொண்டு பேசுவர். பழமையும் புதுமையும் இணைந்து உருகும் புள்ளி பூட்டான். பூட்டானில் உள்ள அதிசயங்களுக்கு எல்லையே இல்லை.

பூட்டானில் என்ன செய்யலாம்

பூட்டானில் சுற்றிப் பார்க்க ஏராளம் உள்ளது- புலிகளின் கூடு மடாலயம் (டைகர்'ஸ் நெஸ்ட் மானஸ்ட்ரி) என்று பிரபலமாக அறியப்படும்  தாக்சுங் பால்பக் மடாலாயம் (தாக்சுங் பால்பக் மானஸ்ட்ரி) அவசியம் காணப்பட வேண்டிய இடம். பாரோ பள்ளத்தாக்கிலிருந்து 900 மீட்டர் உயரம் கொண்ட செங்குத்து பாறையின் மீது இது அமைந்துள்ளது. இந்த மடாலயத்திற்கு செல்லும் பயணமானது சுற்றியுள்ள காடுகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் காட்சிகளை அளிக்கும். அசைந்தாடும் வழிபாட்டு கொடிகள் இதற்கிடையே ஊடுருவி இருக்கும்.

இயற்கை மற்றும் வனவாழ்க்கை காதலர்களுக்கு இந்த இடம் உற்சாகம் தரும். இங்குள்ள 70 சதவீத நிலபரப்பு இயற்கை பாதுகாப்பு அரணாக உள்ளது. இங்கு தேசிய பூங்காக்களை கண்டறிவது கடினம் அல்ல. பூட்டானின் தேசிய விலங்கான டாகின், பனி சிறுத்தைகள், கறுப்பு கழுத்து கொண்ட கொக்குகள், புலகிள் ஆகிய அனைத்தையும் காணலாம். மயிர்க்கூச்செரியும் சாகசங்கள் தேவை என்று விரும்புவர்கள், நீண்ட மலை ஏறுதல், பாறை ஏறுதல், கயாக்கிங், மீன்பிடித்தல் ஆகிவற்றில் ஈடுபடலாம்.  பூட்டானிய உணவு அதிசயமான சுவையை வழங்கும். அங்கு மிளகாய்கள் வெறும் தாளிப்புக்கு மட்டும் பயன்படுவதில்லை. உங்கள் சுவை நரம்புகளுக்கு ஏற்ற விருந்து கிடைக்கும். மிளகாய்தான் அங்கு முக்கிய உணவு.

இங்கு செல்வதற்கு சிறந்த காலம் எது? 

bhutan-a-safe

ஆண்டு முழுவதும் பூட்டானிற்கு செல்லலாம் என்றாலும், அங்கு செல்வதற்கு தகுந்த காலம் வசந்தகாலம் (ஏப்ரல் முதல் ஜூலை வரை) அல்லது இலையுதிர் காலம் (செப்டம்பர் முதல் நவம்பர் வரை), இங்கு நடைபெறும் சேசுஸ் (Tsechus) பண்டிகையால் இந்த மாதம் நிறைய சுற்றுலா பயணிகள் அங்கு செல்கின்றனர். மலை ஏறுபவர்கள் அல்லது எளிமையாக ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், மார்ச் மற்றும் மே மாதத்திற்கு இடையில் அங்கு பயணிக்க வேண்டும். அப்போது மலைத்தொடர்கள் முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும்.  அழகான மலைக்காட்சியைக் காண செப்டம்பர் மற்றும் நவம்பருக்கு இடைப்பட்ட காலத்தில் செல்ல வேண்டும். மழைக்காலமான ஜூலை மற்றும் ஆகஸ்டுக்கு இடைப்பட்ட காலம் கூட நல்ல நேரம்தான். பூட்டானில் உள்ள மழை பொழிவுகள் உங்கள் பயணத்தை பாதிக்கும் அளவிற்கு அதிகமாக இருக்காது. 

பூட்டானுக்கான சிறந்த விடுமுறை பேக்கேஜை நான் எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

உங்கள் பயணத்திற்கு தேவைப்படும் சிறப்பு பேகேஜ்கள் உண்டு. தேனிலவு அல்லது காதல் பேக்கேஜ்களிலிருந்தும், மனதளவில் இளமையாக உள்ளவர்களுக்காக குடும்பத்திற்கான பேக்கேஜ்களையும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மொத்தமான சேவைகளை வழங்கும் பேக்கேஜ்கள் இருக்கும்போதும், பூட்டானை தங்கள் வழியில் சுற்றிப் பார்க்க விரும்புபவர்களுக்கான ஏற்பாடுகளும் உண்டு. நேரடி விமான சேவை, குறிப்பாக மும்பை, பெங்களூரு மற்றும் அகமதாபாத்திலிருந்து நேரடி விமான சேவை உண்டு. நீங்கள் எந்தவகையான விமானத்தில் சென்றாலும் பூட்டானின் மூச்சடைக்கும் மலைக்காட்சிகளைக் காணத் தவறாதீர்கள். எவரெஸ்ட் சிகரம் மற்றும் கஞ்சன்ஜங்கா சிகரம் ஆகியவற்றைக் காணத்தவறாதீர்கள். பூட்டானில் தங்குவதற்கு பல்வேறு வகையான தங்குமிட விருப்பத்தேர்வுகளும் உண்டு. மிகவும் தனிமையான இடத்தில் அமைந்திருக்கும் அமைதியான ஹோட்டலாக இருந்தாலும் அல்லது நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் சொகுசு ஹோட்டலாக இருந்தாலும் இந்த அழகிய நிலத்தின், அதாவது இடிமுழங்கும் டிராகனின் நிலத்தின் அழகை அங்கிருந்து நீங்கள் அனுபவிக்கலாம்.

Packages starting from INR 16,489*

Book Your Bhutan Holiday Package Here!

*Prices may vary