கிழக்குத் தொடர்ச்சி மலையின் கண்டறியப்படாத ஆறு கடற்கரைகள்

Devika Khosla

Last updated: Sep 24, 2019

Want To Go ? 
   

இந்தியாவிலுள்ள கடற்கரைகளைப் பற்றி நினைத்துப் பாருங்கள், உடனடியாக நம் மனதிற்கு வருவது கோவாவும் கேரளாவும்தான். நம்மில் பெரும்பாலோனோர் கவனிக்கத் தவறுவது என்னவென்றால் மேற்குவங்கத்திலிருந்து தமிழ்நாடுவரை பரவியுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒளிந்துள்ள மாணிக்கங்கள். இவை மணலாகவும் அலையாகவும் கடற்கரைகளின் வடிவத்தில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கடற்கரைகளை பலரும் சென்று பார்த்ததில்லை. இவற்றுள் பல சுற்றுலாப் பயணிகளிடம் பிரபலமானது அல்ல, கிழக்குத் தொடர்ச்சி மலையின் கண்டறியப்படாத ஆறு கடற்கரைகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

1. திகா, மேற்கு வங்கம்

Digha

வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள கடற்கரையோர
சுற்றுலா நகரம் திகா. மேற்கு வங்க மாநிலத்தின் பிரபலமான வார இறுதி சுற்றுலா ஸ்தலம் ஆகும். கலங்கலான நீர் உள்ள இந்த கடற்கரையில் தற்போது புதிய திகா கடற்கரை உள்ளது. இது இதன் பழைய சகாவான பழைய திகா கடற்கரையை விஞ்சியுள்ளது. சுத்தமாகவும், குறைவான மக்கள் நெருக்கம் கொண்ட பகுதியாகவும் உள்ள இந்தக் கடற்கரையில் மணல் சுத்தமாக உள்ளது. நீர் கலங்கலாக உள்ளது. ஒரு நாள் முழுவதும் நீச்சலில் கழிப்பதற்கு சிறந்த இடம். திகா கடற்கரையின் கரையோரங்களில் பனை மரங்கள் அடர்ந்துள்ளன. இந்தக் கடற்கரையின் நீளம் ஏறத்தாழ 7 கிலோ மீட்டர்கள் உடையது.

மிக அருகில் உள்ள விமான நிலையம்: கொல்கத்தா

2. கடலில் உள்ள கோபால்பூர், ஒரிசா

Gopalpur-Orissa

தொடுவானத்தின் நீல மடிப்புகள் கொண்ட, கண்கொள்ளா காட்சிகளும் நம்ப முடியாத புராதன மணலும் உள்ள இடம் இந்தக் கடற்கரை ஆகும். கடலில் உள்ள கோபாலபுரத்தை இதுவரை கண்டறியாமல் இருப்பது உண்மையிலேயே அதிசயம்தான். ஒரு காலத்தில் கடலில் உள்ள கோபாலபுரமானது வணிக வர்த்தகத் துறைமுகமாக இருந்துள்ளது. வெயில் காலத்தில் இது ஒரு சொர்க்கம் ஆகும்.

இங்கு வங்காள விரிகுடாவின் அலைகள் மென்மையான தங்க மணல் மேடுகள் வரை அடைகின்றன. ஸ்கூபா டைவிங்கிற்கு (மூச்சு விடு அமைப்புடன் நீரில் குதித்தல்) இந்த நீர் மிகவும் பிடித்தமானது. நீர் விளையாட்டுக்களான வின்ட் சர்ஃபிங் (கடலில் மிதக்கும் மரப்பலகைகளின் மீது அலைகளோடு விளையாடுதல்), துடுப்புப் படகு சவாரி, படகு போட்டி ஆகியவை இங்கு பிரபலம் ஆகும். இந்த ஒதுக்கப்புறமான கடற்கரை நகரத்தில், அதிகாலை வேளையில், சூரிய உதயத்தையும், அப்போது மீனவர்கள் தங்கள் படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்குச் செல்வதையும்  காண்பது அழகிய காட்சி.

மிக அருகில் உள்ள விமான நிலையம்:  கொல்கத்தா

3. மகாபலிபுரம், தமிழ்நாடு 

Mahabalipuram

மிகவும் பிரபலமல்லாத கடற்கரை சுற்றுலாத்தளம் கோவில் நகரமான மகாபலிபுரம். வங்காள விரிகுடாவில் உள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய ஸ்தலம். இங்குதான் பிரபலமான 8ஆம் நூற்றாண்டு கடற்கரை கோவில் உள்ளது. மகாபலிபுரத்தில் கண்கவர் கடற்கரை உள்ளது. அதைத் தொடர்ந்து பல்வேறு  ஹோட்டல்கள் உள்ளன. சொகுசான கடற்கரை சொத்துக்கள் உள்ளன. கதிரவனின் கிரணங்கள் மகாபலிபுரம் கடற்கரையை நிறைத்துள்ளன. இங்குள்ள கடற்கரை நிறைவாக உள்ளது. இந்தக் கடற்கரையில் நன்கு சுற்றித் திரியலாம். இங்கு நீர் விளையாட்டுக்களான ஜெட் கையிங் (நீர்ச்சறுக்குதல்), விண்ட் சர்ஃபிங் (பாய்மர மிதவைச் சறுக்குதல்) ஆகியவை மிகவும் பிரபலம்.

மிக அருகில் உள்ள விமான நிலையம்:  சென்னை

4. ருஷிகொண்டா, ஆந்திரப் பிரதேசம் 

Rushikonda

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ருஷிகொண்டாவில் ஒரு காலம் களைகளும் காட்டுத் தாவரங்களும் மண்டிக் கிடந்தன. இந்தக் கடற்கரையின் திறன் அறிந்த அதிகாரிகள், இந்தப் பகுதியைச் சுத்தம் செய்துள்ளனர். கிழக்குத் தொடர்ச்சிமலையின் கடற்கரைத் திட்டமாக முன்மொழியப்பட்டுள்ள கடற்கரை மேடைத் திட்டத்தின் ஓர் அங்கமாக இதனை மாற்றியுள்ளனர். இங்குள்ள தங்க மணல்களின் பின்புறத்தில் மலைமுகடுகளும் பனை மரத் தோப்புகளும் மாமரத் தோப்புகளும் இதன் எழிலுக்கு மேலும் அழகூட்டுகின்றன. வங்காள விரிகுடாவின் இதமான நீர் மிகவும் அழைக்கிறது. ருஷிகொண்டாவில்தான் சாகசப் பயணக்காரர்கள் பாராசெயில் செய்து அலையில் நீந்தி விளையாடுகிறார்கள்.

மிக அருகில் உள்ள விமான நிலையம்:  விசாகப்பட்டினம்

5. சண்டிப்பூர், ஒரிசா 

Chandipur-Orissa

வங்காள விரிகுடா நீர்ப்பகுதியில் உள்ள மற்றுமொரு சுற்றுலா நகரம் சண்டிப்பூர் ஆகும். இது குறைவான அலையால் சில கிலோமீட்டர்கள் பரந்து விரிந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்ச்சி பெரிய நிகழ்வாக உள்ளது. இந்தக் கடற்கரை பழமையானது. இங்குள்ள அடர்ந்த தோப்புகள் இந்த இடத்தை ஓய்வெடுக்கும் இடமாகவும் புத்துணர்ச்சி பெறும் இடமாகவும் மாற்றியுள்ளன. இது ஒரு மீனவ கிராமம். இங்குள்ள மீனவர்கள் தங்களது அன்றாட மீன்பிடி தொழிலுக்காக தங்களது வலைகளை எடுத்துக்கொண்டு மீன்பிடிக்க கிளம்புவது அமைதியான காட்சி. சண்டிப்பூர் சுற்றுப்புற பன்மை மிக்க பிராந்தியமும் கூட. குதிரைக்கால் நண்டுகளின் வாழ்விடமும் சண்டிப்பூர்தான். இங்குள்ள மணல் மேடுகளில் இவை ஓடி விளையாடுவதையும் காணலாம்.

மிக அருகில் உள்ள விமான நிலையம்:  கொல்கத்தா

6. தால்சாரி, ஒரிசா 

Talsari-Orissa

உறங்கும் மீனவ கிராமமான தால்சாரி இன்னும் வணிகமயத்தின் பிடிக்குள் வரவில்லை. இதன் பின்னணியில் முந்திரி மரங்கள் உள்ளன. மிகவும் புராதனமான இந்தக் கடற்கரையின் தங்கமணல்கள், கூட்டமும் இரைச்சலும் இல்லாமல் உள்ளன. மிகவும் அமைதியாகவும் தனியாகவும் உள்ளன. இங்குள்ள கடற்கரை மிகவும் மென்மையான மணல் கொண்டது என்று பறைசாற்றிக் கொள்ளவில்லை என்றாலும், இங்குள்ள கடல் நீர் அமைதியான, ஆரவாரமில்லா அலைகளைக் கொண்டுள்ளது. இங்கு உப்பங்கழிகளும் உண்டு. இதனாலேயே இக்கடற்கரை தனித்துவம் பெறுகிறது.

மிக அருகில் உள்ள விமான நிலையம்: கொல்கத்தா

எனவே பயணிகளே, இந்தக் கடற்கரைப் பாதையில் சென்று இது வரை செல்லாத, இந்தியாவின் கிழக்கு கடற்கரையின் புராதன கடற்கரைகளை அனுபவியுங்கள். நீங்கள் முதலில் எங்கு செல்லவிருக்கிறீர்கள்?

Book Your Flight to Kolkata Now!

More Travel Inspiration For Mahabalipuram