இலங்கையில் குழந்தைகளுக்கு இணக்கமான 5 ஓய்விடங்கள், உங்கள் குழந்தைகள் கண்டிப்பாக அனுபவிக்கக்கூடியவை

Mikhil Rialch

Last updated: Jun 28, 2017

Want To Go ? 
   

பல வருடங்களாக இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலாத் தளமாக பெயர் பெற்று வருகிறது. அங்குள்ள பண்டைய கடற்கரைகள், செழுமையான கலாச்சாரம், நவீன வசதிகள், நட்புரீதியான உள்ளுர்காரர்கள் ஆகிய அனைத்து அம்சங்களும் இதற்குக் காரணம். அது இந்தியாவிலிருந்து வெகு தொலைவில் இல்லை என்பது உண்மை. மேலும் இது மிகவும் சிக்கனமான சுற்றுலா என்பது இதன் அழகிற்கு அழகூட்டும் அம்சம்.

நீங்கள் இலங்கையில் இருக்கும்போது தேர்ந்தெடுக்கக்கூடிய 5 குழந்தைகளுக்கு இதமான ஓய்விடங்கள்.

சினமன் கிராண்ட் ஹோட்டல் 

Cinnamon-Grand-hotels-in-sri-lanka

குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு தி சினமன் கிராண்ட் ஹோட்டல் நிறைய பொழுதுபோக்கு அம்சங்களைத் தருகிறது. சின்னஞ்சிறு குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக இந்த ஹோட்டலில் இரண்டு அற்புதமான வெளிப்புற நீச்சல் குளங்களும், ஸ்குவாஷ் மற்றும் டென்னிஸ் கோர்ட்டுகளும் உள்ளன. இது மட்டுமல்லாமல் பொது ஓய்வறைகள் (லெளன்ஜஸ்), விளையாட்டுப் பகுதிகள், உள்ளேயே இருக்கும் ஸ்பா போன்ற வசதிகள், ஆகியவை உள்ளன. நீங்கள் சுற்றி பார்க்கத் தேவையான வசதிகளை இங்கு வரவேற்பறையில் உள்ள போக்குவரத்து வசதிகள் பொறுப்பேற்றுக் கொள்கின்றன.

தி  லகூன் மற்றும் தி டாப்ரபேன் உணவகத்தில் உள்ளுர் மற்றும் சர்வதேச உணவுகள் 24 மணி நேரமும் கிடைக்கின்றன.  உங்களது தட்டில் தி லண்டன் கிரில் உணவகமும் எகோ உணவகமும் பிராந்திய ஐரோப்பிய சுவை உணவுகளை கொண்டு வந்து வைக்கும். இந்த ஹோட்டல் அமைந்துள்ள மத்திய இடம், மற்றொரு வரவேற்கத்தக்க அம்சம். ரெஸ்டகார்ட் போலிவாட் ஷாப்பிங் மால், கொழும்பு டவுன்ஹால், இலங்கை தேசிய மியூசியம் ஆகியவை இங்கிருந்து வெறும் 5 நிமிட தொலைவில் உள்ளது. நீங்கள் உங்களது சில்லறை தேர்வுக்காக வெகு தூரம் வருவதற்கு தயாராக இல்லை என்றால், சினமன் கிராண்ட் ஹோட்டல் தனது வளாகத்திற்கு உள்ளேயே விஸ்தரிப்பான சந்தையை வைத்துள்ளது.

இடம்: 77 காலி ரோடு, கொள்ளுப்பிட்டி, 00100 கொழும்பு, இலங்கை

ஒரு இரவிற்கான கட்டணம்: ஓர் இரவிற்கு ரூ. 10,000

Book Your Stay at Cinnamon Grand Hotel

சினமன் லேக்சைடு 

Cinnamon-Lakeside-hotels-in-sri-lanka

கொழும்புவின் சிறந்த 5 நட்சத்திர ஹோட்டல் என்று பலராலும் அங்கீகரிக்கப்பட்ட சினமன் லேக்சைடு, அதி உயர் தரத்தை அளிக்கிறது. இதன் 346 அறைகள், சொகுசுக்காக வடிவமைக்கப்பட்டன, வசதி மற்றும் நல்ல சுவை ஆகியவை இதன் தரத்தை உயர்த்துகின்றன. கொழும்புவின் மிகப் பெரிய நீச்சல் குளமானது இங்கு உள்ளது. சினமன் லேக்சைடு பல்வேறு விதமான பொழுதுபோக்கு வாய்ப்புகளை வழங்குகிறது.

மூன்று களிமண் டென்னிஸ் கோர்ட்டுகள், இரண்டு குளிர்சாதன வசதி மிக்க ஸ்குவாஷ் கோர்ட்டுகள், ஆகியவை குழந்தைகளது விளையாட்டு திறனை வளர்ப்பதற்காக உள்ளன. மேலும் குழந்தைகள் விளையாடும் பகுதிகள், வீடியோ மற்றும் போர்டு விளையாட்டுக்கள், இயற்கை நடைபயணம் மற்றும் காட்டு சுற்றுலா, குளத்திற்கு அருகிலுள்ள பிபிக்யூக்கள், ஓய்விடத்தின் சுகத்திற்குள்ளேயே கடலின் அனுபவத்தைப் பெறுவதற்காக உள்ள கடல்சார் ஓய்விடம் (அக்வா லௌன்ஜ்) ஆகிய வசதிகளை கட்டணம் பெற்றுகொண்டு இந்த ஹோட்டல் அளிக்கிறது. 9 உணவகத் தேர்வுகளின் கண்கவர் அணிவகுப்பு, உள்ளறை ஸ்பா, பயணம் மற்றும் சுற்றிப் பார்ப்பதற்குத் தேவையான சேவைகள், மாலை உணவிற்கான கண்கவர் மொட்டை மாடி ஆகியவை கூடுதல் கவர்ச்சி அம்சங்கள். நகர மையத்தின் முக்கியப் பகுதியில் சினமன் லேக்சைடு அமைந்துள்ளதால், குடும்பத்தினருடன் வந்து தங்கும்போது நன்கு நேரம் மிச்சமாகிறது. எனவே குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்த இடமாக இது உள்ளது.

இடம்: 115, சர் சிற்றம்பலம் ஏ, கார்டினர் மாவாத்தை, கோட்டை,  00100 கொழும்பு, இலங்கை

ஒரு இரவிற்கான கட்டணம்: ஓர் இரவிற்கு ரூ.10,000

Book Your Stay at Cinnamon Lakeside

சென்டரா செய்சான்ட்ஸ் ரிசார்ட் மற்றும் ஸ்பா 

Centara-Ceysands-Resort-&-Spa-hotels-in-sri-lanka

மிகவும் பிரபலமான பெந்தோட்டை கடற்கரையிலிருந்து 5 நிமிட தொலைவில் உள்ளது இந்த ஐந்து நட்சத்திர கடற்கரையோர ஓய்விடம். குழந்தைகளுடன் உள்ள குடும்பங்களுக்கான சிறந்த தேர்வு சென்டரா செய்சான்ட்ஸ் ரிசார்ட் மற்றும் ஸ்பா. இங்குள்ள வசதிகளைப் பொறுத்தவரை ஒரு நீச்சல் குளம், குழந்தைகளுக்கான பிரத்யேக நீச்சல் குளம், ஸ்பா, ஜக்கூசி (நீராவிக் குளியல்), ஆரோக்கியமான கிளப், மற்றும் குழந்தைகள் கிளப் ஆகியவை உள்ளன. விருந்தினரின் வசதிக்காக இங்குள்ள 156 அறைகளும் படைப்பாற்றல் மிக்க வடிவங்களும் சமகால வசதிகளும் பெற்றுள்ளன. இந்த உணவகத்தில் பல்வேறு உணவுகளை சுவைத்துக்கொண்டே குழந்தைகள் இங்குள்ள உணவருந்தும் வளாகத்தில் நேரடி சமையல் நிலையங்களைக் கண்டு களிக்கலாம்.

இடம்: அளுத்கமை, 00500 பெந்தோட்டை, இலங்கை

ஒரு இரவிற்கான கட்டணம்: ஓர் இரவிற்கு ரூ.14,000

Book Your Stay at Centara Ceysands Resort & Spa

அனந்தரா கலுத்தரா ரிசார்ட் 

Anantara-Kalutara-Resort-hotels-in-sri-lanka

இது கலுத்தரா வரலாற்று நகரத்தில் அமைந்துள்ளது. ஓய்விடம் என்று சொல்லிக்கொள்ளும் இந்த ரிசார்ட், ஒரு வெப்பமண்டல சொர்க்கம் ஆகும். வசதிகள் மற்றும் சேவைகளைப் பொறுத்தவரை அதிசிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. இங்கு தங்கும் விருந்தினர்கள் இது அளிக்கும் அனுபவத்தை மறக்கவே முடியாது. இங்குள்ள நீச்சல் குளங்கள், குழந்தைகளுக்கான சாகசக் கிளப்புகள், தண்ணீர் விளையாட்டு நடவடிக்கைகள், நன்கு அடுக்கி வைக்கப்பட்ட நூலகம், சமையல் வகுப்புகள், ஒருங்கிணைந்த சுற்றுலாக்கள் ஆகியவை உள்ளன. இங்குள்ள தங்குமிடங்களின் நளினமும் சேவையில் உள்ள சிரத்தையும் அளவிட முடியாத விகிதாச்சாரத்தில் அனந்தரா கலுத்தரா ரிசார்ட்டைக் கொண்டு நிறுத்துகின்றன.

இடம்: செயின்ட் செபாஸ்டியன் ரோடு, கலுத்தரா 12000,  இலங்கை

ஒரு இரவிற்கான கட்டணம்: ஓர் இரவிற்கு .ரூ.15,000

Book Your Stay at Anantara Kalutara

சங்கிரி லா அம்பாந்தோட்டை ரிசார்ட்டு மற்றும் ஸ்பா 

Shangri-La-Hambantota-Resort-&-Spa-hotels-in-sri-lanka

இலங்கையின் அமைதியான தெற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது சங்கிரி லா அம்பாந்தோட்டை ரிசார்ட்டு மற்றும் ஸ்பா. அம்பாந்தோட்டை பிராந்தியத்தின் வன செழுமைக்கு மத்தியில் அமைந்துள்ளது. 300 அறைகள், 21 சொகுசான சிற்றறைகள் ஆகியவற்றை இயற்கையின் மையத்தில் கொண்டுள்ள இந்த சங்கிரி லா அம்பாந்தோட்டை ரிசார்ட்டு மற்றும் ஸ்பாவானது குழந்தைகளுக்கு எண்ணற்ற வசதிகளை அளிக்கிறது. குளிர்ச்சியான பிராந்தியம் கொண்ட குழந்தைகள் கிளப் ஒன்று இங்குள்ளது. இதில் சாகச விளையாட்டுக்கள் அனைத்தும் உள்ளன. வெளிப்புற நீர் பூங்காங்கள், வண்டுகள் பறக்கும் பகுதிகள், குழந்தைகளுக்கான நீச்சல் குளங்கள், பெற்றோர் அந்நாளை இன்பமுற களிப்பதற்காக குழந்தைகளுக்கான பராமரிப்பு வசதிகள் ஆகியவை உள்ளன. பிராந்திய சர்வதேச உணவுகளைப் பரிமாற பல்வேறு உணவகங்களும் காபி அருந்தகங்களும் உள்ளன.

இடம்: சிற்றகலா எஸ்டேட் சித்ரகலா, அம்பலங்தொட்டை அம்பாந்தோட்டை, இலங்கை.

ஒரு இரவிற்கான கட்டணம்: ஓர் இரவிற்கு ரூ.13,000

 

உங்களது அடுத்த இலங்கை விடுமுறைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகும் அற்புதமான விடுமுறை ரிசார்ட் எது?

More Travel Inspiration For Colombo