இந்தியா முழுவதும் உள்ள 8 சொகுசான ஸ்டெர்லிங் (போற்றத்தக்க) விடுமுறை ரிசாட்டுகள் (ஓய்விடங்கள்)

Devika Khosla

Last updated: Jun 28, 2017

Want To Go ? 
   

2016 நிறைவுறப் போகிறது, நீங்கள் புத்தாண்டில் நுழையும்போது  உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள, புத்துயிர் ஊட்ட, புத்துணர்ச்சி பெறுவதற்கான சிறந்த நேரம் வேறெது? ஸ்டெர்லிங் விடுமுறை ரிசார்ட்டுகள் மிகவும் உயர்தரமான, அதே சமயம், கட்டுப்படியாகக்கூடிய விலையில் உள்ள அறைகளை அளிக்கின்றன. ஓர் விடுமுறை இடைவெளியை கொண்டாடுவதற்கான அற்புதமான இடங்களை இந்தியா முழுவதற்கும் இவை அளிக்கின்றன. மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்டட வசதிகளையும் சலுகைகளையும் இது அளிக்கிறது. இங்குள்ள சில ஆலோசிக்கப்பட்ட சொத்துக்கள் நல்ல விடுமுறை அனுபவத்தை உத்தரவாதப்படுத்துகின்றன. இவை ஒவ்வொன்றும் அதி உயர்தர அனுபவம் மிக்கது.

மூணாறு டெரஸ் கார்டன்ஸ், மூணாறு

Munnar­Terrace-Greens

பசுமையான தேயிலை தோட்டங்களுக்கும் நறுமணமுள்ள வாசனை திரவிய தோட்டங்களுக்கும் மத்தியில் மலை அழகின் பின்னணியில் உள்ளது மூணாறு டெரஸ் கார்டன்ஸ் எனப்படும் மொட்டை மாடித் தோட்டம். இது மிகவும் புதுப்பிக்கப்பட்ட ஓய்விடம். நன்கு ஃபர்னிஷ் செய்யப்பட்ட அறைகளையும் சிற்றறைகளையும் கொண்டது. இங்குள்ள பல்தரப்பு உணவகத்தில் விருந்தினர்கள் தங்கள் உணவை சுவைக்கலாம்.

வட இந்தியா, சீனா மற்றும் கான்டினென்டல் தயாரிப்புகளுடன் உள்ளூர் கேரளா உணவையும் கட்டுப்படியாகும் விலையில் அவை அளிக்கின்றன. மூணாறு டெரஸ் கார்டனில் உள்ள பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மிக அதிகம். இதில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, கிளப் வீடு, பில்லியர்ட்ஸ், பேட்மிண்டன், கேரம், வீடியோ கேம் பகுதி, நேரடி இசை கொண்ட காட்டுத்தீ இரவுகள் ஆகியவை உண்டு.

விலை: ஓர் இரவிற்கு ரூ.5,399லிருந்து துவங்குகிறது.

இடம்: சின்னக்கனல் சூரியநெல்லி சாலை, சின்னக்கனல், கேரளா    685612.

Book Your Stay at Munnar Terrace GreensBook Your Stay at Munnar Terrace Greens

கோடை- பை தி வாலி, கொடைக்கானல் 

Kodai­ByTheValley

கோடை- பை தி வாலியானது கொடைக்கானல் மலையில் அமைந்துள்ளது. கப்பலைப் போன்ற வடிவமைப்பு கொண்ட தனித்துவமான ஓய்விடம். இந்த ஓய்விடத்தின் கட்டிடக்கலை மிகவும் தனித்துவமானது. இது சுற்றுப்புறத்துடன் நன்கு கலக்கக்கூடியது. எனவே விருந்தினர்கள் இயற்கையுடன் இணைய முடியும். இங்குள்ள அறைகளும் சிற்றறைகளும் நவீன வசதிகளுடன் உள்ளன. தட்டையான திரை கொண்ட தொலைக்காட்சிகளும் உள்ளறை உணவுச் சேவைகளும் உள்ளன.  மிதிவண்டி மூலம் விருந்தினர்கள் வெளியில் பயணிக்க செல்லலாம். இயற்கை நடைபயிற்சி செய்யலாம். கோடை- பை தி வாலியில் உள்ள மற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் – உட்புற போர்டு விளையாட்டுக்கள், பேட்மிண்டன், டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் ஆகியவை. இங்குள்ள பல்சுவை உணவகத்தில் இந்திய, சீன, தந்தூரி, கான்டினென்டல் உணவுகள் கிடைக்கும்.

விலை: ஓர் இரவிற்கு ரூ.4,319 லிருந்து துவங்குகிறது.

இடம்: தபால் பெட்டி எண் 25, பள்ளங்கி ரோடு, அட்டுவம்பட்டி, கொடைக்கானல், தமிழ்நாடு 624 101.

Book Your Stay at Kodai – By The ValleyBook Your Stay at Kodai – By The Valley

ஃபெர்ன் ஹில், ஊட்டி 

Ooty­FernHill

மிகவும் கண்கவர் நீலகிரி மலையை இருப்பிடமாகக் கொண்டுள்ளது ஃபெர்ன் ஹில். இந்த தனித்துவமான ஓய்விடம் ஊட்டியின் வரலாற்று சிறப்புமிக்க கடந்த காலத்திலிருந்து புகழ் பெற்றது. அமைதியான சுற்றுப்புறச் சூழல் உள்ள இந்த இடத்தில் விருந்தினர் தங்குமிடங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவை மிகவும் வசதியாகவும் இட வசதி கொண்டதாகவும் இருக்கும்.

உள்ளூர் திருவிழா ஒன்று இந்த உணவகத்தில் நடத்தப்படும். இதில் நீலகிரி பழங்குடியினர் உணவுகளான அவாரை உதக்கா, ஓட்டைக்குடி உதிக்கா, துப்பாத்திட்டு, ஈரிகிட்டு, என்னட்டு ஆகியவை பரிமாறப்படும். இவை மட்டுமல்லாமல் இந்திய, சீன, கான்டினென்டல் உணவுகளும் பரிமாறப்படும். ஃபெர்ன் ஹில் பகுதியில் பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகளும் உள்ளன. இதில் குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, உட்புற வெளிப்புற விளையாட்டு கிளப்புகள், மங்கி கிரால், பர்மா பிரிட்ஜ் போன்ற சாகச நடவடிகைகள் மற்றும் சுவர் ஏறுதல் ஆகியவை நடைபெறுகின்றன. வார இறுதிகளில் டிஸ்கொத்தே நடனங்களும் அரங்கேறுகின்றன.

விலை: ஓர் இரவிற்கு ரூ.5,309லிருந்து துவங்குகிறது.

இடம்: 73, குன்டா ஹவுஸ் ரோடு, ஃபெர்ன் ஹில், ஊட்டி, தமிழ் நாடு 643004.

Book Your Stay at Fern HillBook Your Stay at Fern Hill

டார்ஜிலிங் குஷ் ஆலயா, டார்ஜிலிங்

அமைதியிலும் ஆன்மிகத்திலும் திளைத்திருக்கும் டார்ஜிலிங் பகுதியின் அமைதியை பிரதிபலிக்கிறது டார்ஜிலிங் குஷ் ஆலயா ஓய்விடம். இது ஒரு நவீனமான ஓய்விடம். இங்குள்ள அறைகளும் சிற்றறைகளும் மிகவும் சொகுசாக ஃபர்னிஷ் செய்யப்பட்டுள்ளன. இதனால் மலைப்பகுதியில் சொகுசான தங்கும் வசதியை இது அளிக்கிறது. எல்லா வயதிலும் உள்ள விருந்தினர்கள் அருகிலுள்ள மடாலயங்களுக்கு சென்று கலாச்சார நடைபயணம் புரிவார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இங்கிருக்கும் காப்பகத்தில் விட்டுவிட்டு சுற்றுப்பயணம் செல்லலாம்.

 இங்குள்ள பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் குழந்தைகள் விளையாடும் இடம், விளையாட்டுக்களுடன் கூடிய ஒரு கிளப் ஹௌஸ்,வீடியோ கேம் முனையங்கள், இதர விளையாட்டுக்கள் ஆகியவை உள்ளன. டார்ஜிலிங் குஷ் ஆலயாவில் உள்ள, தி ஜெனரல் லாயிட் உணவகமானது திபெத்திய மற்றும் சீன உணவுகளை வழங்குகிறது.

விலை: ஓர் இரவிற்கு ரூ.5,399 லிருந்து துவங்குகிறது.

இடம்: கூம் மோனாஸ்டிரி ரோடு, கூம், டார்ஜிலிங், மேற்கு வங்கம் 734102

Book Your Stay at Darjeeling Khush AlayaBook Your Stay at Darjeeling Khush Alaya

லொனாவாலா அன்டர் தி ஓவர், லொனாவாலா 

under-the-over-lonavla

மகாராஷ்டிராவின் சகாயத்ரி மலைப்பகுதிகளில் உள்ள பெரிய சுற்றுலாத்தளம் லொனாவாலா மலை வாசஸ்தலம். நவீன வசதிகள் கொண்ட நன்கு ஃபர்னிஷ் செய்யப்பட்ட அறைகள் கொண்டது லொனாவாலா அன்டர் தி ஓவர். நீச்சல் குளம், பயண மேசை ஆகியவை கொண்ட ஓய்வறை வசதிகள் உள்ளூர் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்கின்றன. சுற்றுப்பகுதியில் உள்ள மலைகளுக்கான தினசரி சுற்றுலாவும் உண்டு. லொனாவாலா அன்டர் தி ஓவர்ரில் பல்சுவை உணவகமும் உண்டு.  கேளிக்கையும் நகைச்சுவையும் நிறைந்த விருந்தினர் அனுபவத்திற்கான விடுமுறை கொண்டாட்டங்களும் உண்டு.

விலை: ஓர் இரவிற்கு ரூ.4,319லிருந்து துவங்குகிறது.

இடம்: 107, காத்ரி பூங்கா, பூனா சாலை, மன்சக்தி கேந்திரத்திற்கு அருகில், லொனாவாலா, மகாராஷ்டிரா 410401

Book Your Stay at Lonavala Under The OverBook Your Stay at Lonavala Under The Over

கோவா கிளப் எஸ்டாடியா, கோவா 

goa-club-estadia-goa

கோவா கிளப் எஸ்டாடியாவானது ஸ்பானிஷ் கட்டிடக்கலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு கோவாவில் ஒரு அமைதியான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முக்கிய கடற்கரைகளுக்கு மிக அருகில் உள்ளது. நன்கு இட வசதி கொண்ட அறைகள், சிற்றறைகள், ஆகியவை நவீன வசதிகளுடன் ஃபர்னிஷ் செய்யப்பட்டுள்ளன. கோவா கிளப் எஸ்டாடியாவில் ஒரு நீச்சல் குளம், பனை மரங்கள் சூழப்பட்ட குழந்தைகள் குளம், குளத்தங்கரையில் ஓய்வெடுக்க வசதி ஆகியவை உள்ளன. இங்குள்ள பல்சுவை உணவகத்தில் விருந்தினர்கள், சுவையான, உள்ளூர் கோவா உணவுகளை சுவைக்கலாம். அந்த நாளின் புதிய கடல் உணவுகளையும் ரசிக்கலாம்.

விலை: ஓர் இரவிற்கு ரூ.8,000 லிருந்து துவங்குகிறது.

இடம்: பிடிஏ காலனி, அல்டோ பொர்வாரிம், பார்டேஜ், கோவா 403521

Book Your Stay at Goa Club EstadiaBook Your Stay at Goa Club Estadia

ட்ரீடாப் ரிவர்வியூ, கார்பெட்                                                                                                                    

treetop-riverview-corbett

சலசலத்து ஓடும் ராம்கங்கா நதியின் அருகிலும் இமயமலையின் அடிவாரத்திலும் ட்ரீடாப் ரிவர்வியூ அமைந்துள்ளது. பல்வேறு ஏக்கர்கள் விரிந்து பரந்துள்ள கண்கவர் ஓய்விடம் இது. விருந்தினர்களுக்கு சுவையான காட்டு அனுபவத்தை இது வழங்குகிறது. இந்த ஓய்விடத்தின் அறைகளில் உள்ள தங்குமிடங்களும் சிற்றறைகளும் உயர் தரமானவை. நீச்சல் குளம், பயணிகள் மேசை, பல்சுவை உணவகம் ஆகியவை இங்குள்ள வசதிகள். இங்குள்ள உணவகமானது சைவ அசைவ உணவுகளை வழங்குகிறது. மாலை நேரங்களில் சுடு இறைச்சி (பார்பிக்யூ) உணவுகளை வழங்குகின்றன.  கேளிக்கைக்காக ட்ரீடாப் ரிவர்வியூவானது ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் ஜங்கிள் சஃபாரிக்களை ஏற்பாடு செய்யும். காட்டுத் தீ இரவுகள், உட்புற வெளிப்புற விளையாட்டுக்கள், குளத்திற்கு அருகில் உள்ள ஓய்விடம் என இங்கு பல விதமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

விலை: ஓர் இரவிற்கு ரூ.4,499 லிருந்து துவங்குகிறது.

இடம்: ஜிம் கார்பெட் தேசிய பூங்கா, சங்கர், மெர்சுலா, உத்தரகண்டு 244715

Book Your Stay at Treetop RiverviewBook Your Stay at Treetop Riverview

மசூரி டான்சிங் லீவ்ஸ், மசூரி

டூன் பள்ளத்தாக்கின் கண்கவர் காட்சிகளுடன், மசூரி டான்சிங் லுவ்ஸ்சானது கடுவாள் இமயமலைப்பகுதியில் மசூரியின் மலைப்பகுதியில் உருவாகியுள்ளது. இடவெளி கொண்ட, நன்கு நிர்ணயிக்கப்பட்ட அறைகள் மற்றும் சிற்றறைகள் இங்குள்ளன. இவைகள் பால்கனியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இந்தச் சுற்றுப்புறத்தின் எழிலை விருந்தினர்கள் கண்டு களிக்கலாம். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற வகையில் பல்வேறு விளையாட்டுக்கள் இங்குள்ளன.

 குழந்தைகளுக்கான விளையாட்டு கூடம், உட்புற விளையாட்டுக்கள் அடங்கிய கிளப் அறை, உள்ளக நூலகம், பார்பிக்யூ உணவுகள், வார இறுதி நாட்களில் இசையுடன் கூடிய காட்டுத்தீ விருந்துகள் ஆகியவை இங்கு இருக்கும். இங்குள்ள உட்ஸ்டாக் உணவகம் பல்தரப்பு உணவுகள் கொண்ட திருவிழாவிற்கு ஏற்பாடு செய்கிறது. கோரிக்கையின் பேரில் ஜெயின் உணவும் வழங்கப்படுகிறது.

விலை: ஓர் இரவிற்கு ரூ.4,949 லிருந்து துவங்குகிறது.

இடம்: இராதா பவன் எஸ்டேட், சர்குலர் சாலை, மசூரி, உத்தரகண்ட் 248179.

Book Your Stay at Mussoorie Dancing LeavesBook Your Stay at Mussoorie Dancing Leaves

2016ஆம் ஆண்டு நிறைவுறுவதை ஓர் உயர் குறிப்புடன் முடித்துவைக்க ஸ்டெர்லிங் ஹாலிடேஸ் ரிசார்ட் புராப்பர்ட்டியில் உங்கள் விடுமுறையை கழிக்கவும். மிகவும் சிறப்பாகவும் அம்சாகவும் உணர்வீர்கள். மேலே குறிப்பிடப்பட்ட விலைகள் எல்லாம் தோராயமான மதிப்புகள். மாற்றத்திற்கு உட்பட்டவை.